இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் ஆபரேட்டரான பார்தி ஏர்டெல் ரூ.9-க்கு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இது ரூ.9க்கு வருகிறது மற்றும் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. இந்தத் திட்டம் ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். சர்வீஸ் வேலிடிட்டியை வழங்காது. இந்த திட்டம் பற்றி முழுமையாக பார்ப்போம்.
ரூ.9 விலையில் அன்லிமிடெட் டேட்டா
ஏர்டெல் நிறுவனம் ரூ.9 விலையில் அன்லிமிடெட் டேட்டா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும் இதன் வேலிடிட்டி காலம் பெறும் 1 மணி நேரம் தான்.
ஆனால் அந்த நேரத்திற்குள் நீங்கள் ஹை-ஸ்பீட் டேட்டா பயன்படுத்தி பெரிய சைஸ் ஃபைல்களை டவுன்லோடு செய்யலாம். 10 ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டாவை வழங்குகிறது.
தற்போது, எந்த ஒரு நிறுவனத்தின் டேட்டா திட்டத்தில் இருந்து 10ஜிபி வரை டேட்டா பெற வேண்டுமானால், அதற்கு நீங்கள் 100 ரூபாய்க்கு குறையாமல் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
ஆனால் இந்த திட்டம் உங்களுக்கு 9 ரூபாய்க்கு மட்டுமே தரும். இந்த 1 மணி நேரத்தில் நீங்கள் விரைவாக பெரிய சைஸ் ஃபைல்களை விரைவாக டவுன்லோடு செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“