Airtel launches three prepaid plans with free Disney Hotstar subscription Tamil News : ஏர்டெல் மூன்று புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அதிவேக டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, தினசரி எஸ்எம்எஸ் நன்மைகள் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுக்கு இலவச அணுகலுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றி மேலும் அறியப் படிக்கவும்.
இந்தத் தொலைத்தொடர்பு ஆபரேட்டர், ரூ.2,798 வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இது, 365 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. அதாவது, நீங்கள் இந்த திட்டத்திற்கு மாதத்திற்கு சுமார் 234 ரூபாய் செலவு செய்யவேண்டும்.
அதன் நன்மைகளைப் பொறுத்தவரை, அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகள், 100 தினசரி எஸ்எம்எஸ் செய்திகள் மற்றும் 2 ஜிபி அதிவேக தினசரி டேட்டா ஆகியவற்றை உள்ளடக்கியது. வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தில் ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் 30 நாள் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் மட்டும் சந்தாவும் அடங்கும்.
இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா ரூ.499 மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது. இது மொபைல் மட்டுமே திட்டம். இந்த திட்டம் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம், இலவச ஹலோ டியூன்ஸ், 3 மாத விங்க் மியூசிக் மற்றும் ஃபாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக் ஆகியவற்றை வழங்குகிறது.
மேலும் ஏர்டெல் இப்போது, ரூ.499 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தையும் கொண்டுள்ளது. மேற்கூறிய வருடாந்திர திட்டத்துடன் நிறுவனம் வழங்கும் அனைத்து நன்மைகளையும் நீங்கள் பெறுவீர்கள். இங்குள்ள மிகப்பெரிய வித்தியாசம் ரூ.499 பேக்கில் 2 ஜிபிக்கு பதிலாக தினசரி 3 ஜிபி டேட்டாவை பெறுவீர்கள். இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது.
ஏர்டெல்லின் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டமும் அதே நன்மைகளுடன் வருகிறது. ஆனால், 56 நாட்களுக்கு 2 ஜிபி தினசரி டேட்டா வழங்குகிறது.
ஏர்டெல்லின் அனைத்து போஸ்ட்பெய்ட் திட்டங்களும் ஒரு வருட இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் வருகிறது என்று தொலைத்தொடர்பு ஆபரேட்டர் கூறுகிறது. ஆனால், அது ரூ.499 மதிப்புள்ள போஸ்ட்பெய்ட் பிளான்களுக்கு அதிகமாக இருக்கவேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
கூடுதலாக, அனைத்து ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டங்களும் ரூ.999-க்கு மேல் ஒரு வருட இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சூப்பர் சந்தாவை தொகுக்கிறது. இதன் மதிப்பு ரூ.899. தற்போது, ஏர்டெல்லின் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் 1 ஜிபிபிஎஸ் வேகம், அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள் கொண்ட பிராட்பேண்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil