Advertisment

இலவச ரவுட்டர், எக்ஸ் ஸ்ட்ரீம் பாக்ஸ், 5 மாத வேலிடிட்டி: அனைத்தும் ரூ.199 மட்டுமே; புதிய 2 பிராட்பேண்ட் திட்டத்தை களமிறக்கிய ஏர்டெல்

Airtel Launches Two news Broadband Standby Plans: ஏர்டெல் நிறுவனம் புதிய 2 பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
May 09, 2023 13:30 IST
Stock Market Today 11 Januvary 2023

பார்தி ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் பல்வேறு சலுகைகளுடன் குறைந்த விலையில் பிராட்பேண்ட் ஸ்டாண்ட்பை (Broadband Standby) என்ற பெயரில் புதிய 2 பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் எக்ஸ் ஸ்ட்ரீம் ஃபைபர் என்ற பெயரில் பிராட்பேண்ட் சேவைகளை வழங்கி வருகிறது. 1 ஜிபிபிஎஸ் வரையில் இணைய சேவைகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் தற்போது குறைந்த விலையில் பல்வேறு சலுகைகளுடன் 2 புதிய பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.199 மற்றும் ரூ.399 விலையில் 5 மாத வேலிடிட்டி உடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

Advertisment

ரூ.199 பிராட்பேண்ட் திட்டம்

ஏர்டெல்லின் ரூ.199 பிராட்பேண்ட் ஸ்டாண்ட்பை திட்டத்தில் 10 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு இலவச வைஃபை ரவுட்டர், எக்ஸ் ஸ்ட்ரீம் செட்-ஆப் பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 5 மாத வேலிடிட்டி உடன் வருகிறது. ரூ. 500 இன்ஸ்டலேசன் கட்டணத்துடன் கூடிய ரூ.1,674 மதிப்பிலான ரவுட்டர் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.399 பிராட்பேண்ட் திட்டம்

ஏர்டெல்லின் ரூ.399 பிராட்பேண்ட் ஸ்டாண்ட்பை திட்டத்தில் 10 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது.

இலவச வைஃபை ரூட்டர், எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் மற்றும் 350க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

இவ்விரு திட்டங்களும் புதிதாக ஏர்டெல் எக்ஸ் ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டத்தில் இணைபவர்களுக்கு உதவியாக இருக்கும். புதிதாக வைஃபை பெற விரும்பும் பயனர்கள் ஏர்டெல்லின் இந்த திட்டத்தை பயன்படுத்தலாம். ஏர்டெல் எக்ஸ் ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் சேவை 1,140 நகரங்களில் வழங்கப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு நகரங்களிலும் விரிவுபடுத்தி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment