Airtel new postpaid plans for corporate and retail users Tamil News : கார்ப்பரேட் மற்றும் ரீடெயில் பயனர்களுக்காக ஏர்டெல் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்கள் 5 ஜி-தயார் நெட்வொர்க் மற்றும் சிறந்த டிஜிட்டல் முதல் வாடிக்கையாளர் பராமரிப்பு ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் கூடுதல் டேட்டா நன்மைகளை வழங்கும் என்று இந்த தொலைத் தொடர்பு ஆபரேட்டர் கூறுகிறது. புதிய ஏர்டெல் திட்டங்கள் தொகுக்கப்பட்ட உள்ளடக்கம் மற்றும் வணிக உற்பத்தித்திறன் கருவிகள் போன்ற பிரத்யேக நன்மைகளுடன் வருகின்றன. ஏர்டெல், ரூ.749 குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டத்தையும் நிறுத்தியுள்ளது.
ஏர்டெல்லின் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்கள்
ஏர்டெல் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இது, 40 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது. நீங்கள் விங்க் மியூசிக் ஆப், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப், 1 வருடத்திற்கான ஷா அகாடமி மற்றும் இலவச ஹலோ டியூன்ஸ் ஆகியவற்றைப் பெறுவீர்கள். ரூ.499 ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டமும் உள்ளது. இது, 75 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மீதமுள்ள சலுகைகள் ரூ.399 திட்டத்திற்கு ஒத்தவை.
இந்நிறுவனம் இப்போது ரூ.999 குடும்பத் திட்டத்தை (1 + 2 ஆட் ஆன்) கொண்டுள்ளது. இதில் மொத்தம் 210 ஜிபி டேட்டா உள்ளது. முதல் இணைப்பு, 150 ஜிபி டேட்டாவை பெறும். மற்ற இரண்டு இணைப்புகள், 30 ஜிபி டேட்டாவை பெறும். மேலும், அமேசான் பிரைம் (ஒரு வருடம்), டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி (ஒரு வருடம்), விஐபி சேவை, ஏர்டெல் செக்யூர், விங்க் மியூசிக் ஆப் பிரீமியம், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம், ஷா அகாடமி ஆகிய பிற நன்மைகளும் இதில் அடங்கும்.
ஏர்டெல், ரூ.1,599 குடும்ப திட்டத்தையும் (1 + 1 ஆட் ஆன்) அறிமுகப்படுத்தியுள்ளது. இது அன்லிமிடெட் டேட்டாவுடன் வருகிறது. அதாவது, நீங்கள் 500 ஜிபி டேட்டாவை பெறுவீர்கள். வழங்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும், அதன் வேகம் 128 கே.பி.பி.எஸ்-ஆகக் குறையும். அமேசான் பிரைம் (1 வருடம்), டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி (1 வருடம்), விஐபி சேவை, ஏர்டெல் செக்யூர், விங்க் மியூசிக் ஆப் பிரீமியம், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம், ஷா அகாடமி ஆகிய பிற நன்மைகளும் கிடைக்கும்.
எந்த ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டத்திற்கும் சிம் ஒன்றுக்கு ரூ.299 செலுத்தி ஒரு இணைப்பைச் சேர்க்கும் விருப்பதைத் தருகிறது. இந்த விலைக்கு, நீங்கள் 30 ஜிபி கூடுதல் டேட்டா (முன்பு 10 ஜிபி), அன்லிமிடெட் அழைப்பு மற்றும் தேங்க்ஸ் நன்மைகளைப் பெறுவீர்கள்.
ஏர்டெல் புதிய கார்ப்பரேட் போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது
இந்த பிரிவில், அடிப்படை திட்டம் ரூ.299. இது, 30 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்கும். ஏர்டெல் கால் மேனேஜர், விங்க் மியூசிக் ஆப், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம் மற்றும் ஷா அகாடமிக்கு 1 வருடம் இலவச அணுகல் ஆகியவை பிற நன்மைகள். ரூ 349 ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டம், 40 ஜிபி டேட்டாவை அளிக்கிறது மற்றும் மீதமுள்ள நன்மைகள் முந்தைய திட்டத்தைப் போலவே இருக்கும்.
ஏர்டெல் இப்போது ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தையும் வழங்குகிறது. இது, 60 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளுடன் வருகிறது. இந்த திட்டம் டிரேஸ்மேட், கூகுள் ஒர்க்ஸ்பேஸ், ஏர்டெல் அழைப்பு மேனேஜர், அமேசான் பிரைம் (1 வருடம்), டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி (1 வருடம்), விஐபி சேவை மற்றும் ஏர்டெல் செக்யூர், இலவச விங்க் மியூசிக் ஆப் பிரீமியம் சந்தா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம் உறுப்பினர் மற்றும் ஷா அகாடமி அணுகல் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
ரூ.499 மற்றும் ரூ.1,599 ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்களுடனும் நீங்கள் இதே நன்மைகளைப் பெறுவீர்கள். அதன் வேறுபாடு ஏர்டெல் வழங்கும் டேட்டாக்களில் மட்டுமே உள்ளது. ரூ.499 திட்டம் 100 ஜிபி தருகிறது. அதே நேரத்தில் ரூ.1,599 திட்டம் 500 ஜிபி டேட்டாவுடன் வருகிறது.
ஏர்டெல் ரூ.749 குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டத்தை நிறுத்துகிறது: பிற திட்டங்களை சரிபார்க்கவும்
புதிய வாடிக்கையாளர்களுக்காக நிறுவனம் தனது ரூ.749 குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டத்தை நிறுத்தியுள்ளதுடன், மேம்பட்ட டேட்டா சலுகைகளுடன் ரூ.999 குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டத்தையும் வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் இப்போது எந்த ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டத்திற்கும் ரூ.299 / சிம்மில் ஒரு இணைப்பைச் சேர்த்து 30 ஜிபி கூடுதல் டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் தேங்க்ஸ் சலுகைகளைப் பெறலாம். இது முன்பு 10 ஜிபி டேட்டாவை மட்டுமே கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.