6 ஜிபி வரை இலவச டேட்டா கூப்பன்களை வழங்கும் ஏர்டெல்

Airtel offering up to 6gb free data இந்த திட்டங்களுடன், வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டாவின் ஆறு கூப்பன்கள் கிடைக்கின்றன. இது 84 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

Airtel offering up to 6gb free data coupons with these prepaid plans Tamil News
Airtel offering up to 6gb free data coupons

Airtel offering up to 6gb free data coupons Tamil News : ஏர்டெல் மீண்டும் அதன் சில ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுடன் 6 ஜிபி வரை இலவச டேட்டா கூப்பன்களை வழங்குகிறது. இந்த தொலைதொடர்பு ஆபரேட்டர் 1 ஜிபி கூப்பன்கள் வடிவில் 6 ஜிபி வரை இலவச டேட்டாவை வழங்குகிறது. மேலும், இத்திட்டத்தை வாங்கியதும், சந்தாதாரரின் கணக்கில் இந்த டேட்டா அப்டெட் ஆகும். இந்த இலவச டேட்டா சலுகையை முதலில் டெலிகாம் டாக் கண்டறிந்தது.

ஏர்டெல் இலவச டேட்டா சலுகை விவரங்கள்

ரூ.500-க்கு கீழ் வரும் சில ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள் 2 ஜிபி அல்லது 4 ஜிபி இலவச டேட்டாவை வழங்குகின்றன. அனைத்து இலவச டேட்டாவையும் ஒரே நேரத்தில் ஏர்டெல் க்ரெடிட் செய்யாது. சந்தாதாரர்களுக்கு 1 ஜிபி டேட்டா கூப்பன்கள் கிடைக்கும். ரூ.219, ரூ.249, ரூ.279, ரூ.289, ரூ.298, ரூ.349, ரூ.398 அல்லது ரூ.448 ப்ரீபெய்ட் திட்டம் வாங்குவோர்களுக்கு 1 ஜிபி டேட்டாவின் இரண்டு கூப்பன்கள் கிடைக்கும். இரண்டு வவுச்சர்களும் நீங்கள் ரீசார்ஜ் செய்த நாளிலிருந்து 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ரூ.399, ரூ.449, ரூ.558 மற்றும் ரூ.599 ரீசார்ஜ் திட்டங்களுடன், ஏர்டெல் தலா நான்கு கூப்பன்கள் 1 ஜிபி டேட்டாவை தலா 56 நாட்கள் செல்லுபடியாகும் காலம் வரை தருகிறது. 6 ஜிபி இலவச டேட்டாவை பெற விரும்புவோர் ரூ.598 அல்லது ரூ.698 திட்டத்தை வாங்க வேண்டும். இந்த திட்டங்களுடன், வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டாவின் ஆறு கூப்பன்கள் கிடைக்கின்றன. இது 84 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

இலவச டேட்டா சலுகை ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டின் வழியாக மட்டுமே கிடைக்கிறது. அதனால்தான் மேலே குறிப்பிட்ட திட்டங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் நிறுவனத்தின் பயன்பாட்டின் மூலம் வாங்குகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் வழியாக பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. ப்ரீபெய்ட் திட்டத்தை வாங்கியவுடன் தகுதியான வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் இலவச டேட்டா சலுகை குறித்து தெரிவிக்கப்படும் என்று ஏர்டெல் கூறுகிறது.

இலவச டேட்டா கூப்பன்களை மீட்டெடுக்க அல்லது கோர, ஏர்டெல் பயனர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டில் உள்ள “எனது கூப்பன்கள்” பிரிவைப் பார்வையிட வேண்டும். இங்கே, கூப்பன்களின் செல்லுபடியையும் நீங்கள் காண முடியும். ஒவ்வொரு 1 ஜிபி டேட்டா கூப்பனும், கூப்பனைக் கோரிய ஒரு நாளுக்குள் காலாவதியாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, நீங்கள் 1 ஜிபி டேட்டா கூப்பனை காலை 9 மணி அல்லது மாலை 5 மணிக்கு கோரியிருந்தால், இலவச டேட்டா இரவு 12 மணிக்கு காலாவதியாகிவிடும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Airtel offering up to 6gb free data coupons with these prepaid plans tamil news

Next Story
வேலன்டைன்ஸ் டே கிப்ட்ஸ்: ரூ.2,000 முதல் ரூ .1 லட்சம் வரைTechnology news in tamil Valentine's Day 2021 Gift ideas A list of best gadgets starting at Rs 2,000 to Rs.1 lakh
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express