scorecardresearch

5ஜி உடன் 60ஜிபி டேட்டா: ஏர்டெல் 1 மாத திட்டம் என்ன?

ஏர்டெல் ரூ.509 விலையில் 1 மாத வேலிடிட்டி உடன் 60ஜிபி டேட்டா வழங்குகிறது.

Airtel revamps prepaid plans
Airtel

ஏர்டெல் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது, ப்ரீபெயட், போஸ்ட்பெஸ்ட் எனத் திட்டங்களை வழங்குகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப விலைக்கு ஏற்ப வேலிடிட்டி, திட்டப் பலன்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஏர்டெல் ரூ.509 விலையில் 1 மாத வேலிடிட்டி உடன் 60ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி ஆகியவைகளை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.509 திட்டம்

பார்தி ஏர்டெல்லின் ரூ.509 திட்டத்தில் 60ஜிபி மொத்த டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனர்கள் அன்லிமிடெட் காலிங் வசதி, 300 எஸ்.எம்.எஸ் பலன்கள் பெறுவர். இந்த திட்டம் 1 மாதம் வேலிடிட்டி கொண்டது. இதே திட்டத்தில் திட்டம் முடிவடையும் முன் ரீசார்ஜ் செய்தால் பழைய திட்ட பலன்களையும் பெறலாம்.

அதோடு 5ஜி அன்லிமிடெட் டேட்டாவும் இந்த திட்டத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. உங்கள் பகுதியில் ஏர்டெல் ட்ரூ 5ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது என்றால் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் Apollo 24|7 Circle, Hellotunes, Wynk Music போன்ற கூடுதல் நன்மைகளையும் பெறலாம். ஆனால் இந்த திட்டத்தில் ஓ.டி.டி பலன்கள் இல்லை.

அதேவேளையில் ஏர்டெல்லின் ரூ.489 திட்டம் இதே பலன்களுடன் 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 50ஜிபி மொத்த டேட்டா வழங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Airtel offers 60gb of data with this 1 month validity