scorecardresearch

Airtel வழங்கும் இரண்டு சிறப்பு திட்டங்கள் தெரியுமா?

Airtel has stopped all its streaming plans | ஜியோ தனது அனைத்து டிஸ்னி + ஹாட்ஸ்டார் திட்டங்களையும் ரத்து செய்த நிலையில், ஏர்டெல் அதன் அனைத்து ஸ்ட்ரீமிங் திட்டங்களையும் நிறுத்தி விட்டு இரண்டு திட்டங்களுக்கு மட்டுமே வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Airtel வழங்கும் இரண்டு சிறப்பு திட்டங்கள் தெரியுமா?
Airtel & Disney+Hotstar

Airtel offers two special plans | ஏர்டெல் இரண்டு சிறப்பு திட்டங்களை வழங்குகிறது | ரிலையன்ஸ் ஜியோ அனைத்து போஸ்ட்பெய்ட் திட்டங்களிலிருந்தும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை ரத்து செய்துள்ளது.

Airtel மற்றும் Gio இரண்டும் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களாக உள்ளன. இதில் Jio நிறுவனம் சமீபத்தில் அதன் அனைத்து Disney+Hotstar திட்டங்களையும் நீக்கியது. இந்நிலையில் தற்போது Airtel நிறுவனமும் அதன் அனைத்து Disney+Hotstar ஸ்ட்ரீமிங் திட்டங்களையும் நிறுத்தி விட்டு இரண்டு திட்டங்களுக்கு மட்டுமே வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது ரூ. 499 மற்றும் ரூ. 3359 ஆகிய இரண்டு திட்டங்களில் மட்டுமே Disney+Hotstar கிடைக்கிறது

அதன்படி, இதுவரை வழங்கப்பட்ட 181 ரூபாய், 399 ரூபாய், 599 ரூபாய், 839 ரூபாய், 2999 ரூபாய் ஆகிய திட்டங்களில் இருந்து Disney+Hotstar நீக்கப்பட்டுவிட்டது. தற்போது ரூ. 499 மற்றும் ரூ. 3359 ஆகிய இரண்டு திட்டங்களில் மட்டுமே Disney+Hotstar கிடைக்கிறது.

இதில், 499 ரூபாய் திட்டத்தில் உங்களுக்கு மாதம் முழுவதும் அன்லிமிடெட் காலிங் வசதி, நாள் ஒன்றுக்கு 100 SMS மற்றும் 28 நாட்களுக்கு 2GB டேட்டா வசதி கிடைக்கும்.

மேலும், 3359 ரூபாய் திட்டத்தில் ஆண்டு முழுவதும் அன்லிமிடெட் டேட்டா வசதி கிடைக்கும். மேலும் 2.5GB டேட்டா வசதி, நாள் ஒன்றுக்கு 100 SMS போன்ற பல அம்சங்கள் இதில் உள்ளன. இந்த இரு திட்டங்களிலும் Disney+Hotstar சந்தா உள்ளது. இருப்பினும், 3359 ரூபாய் திட்டத்தில் கூடுதல் இலவசமாக Amazon Prime Video Mobile Edition Subscription மற்றும் Airtel Thanks ஆகிய திட்டங்கள் கிடைக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Airtel offers two new plans disneyhotstar gio