Airtel offers unlimited calls 1GB daily data Jio Vi prepaid recharge plans : ஏர்டெல் அன்லிமிடெட் அழைப்பு சலுகைகள் மற்றும் 1 ஜிபி தினசரி டேட்டாவை ரூ.199-க்கு வழங்குகிறது. இந்த திட்டம் நிறைய டேட்டாவை வழங்காவிட்டாலும், குறைந்தபட்சம் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கொடுக்கிறது. அழைப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட டேட்டா தேவைப்படுபவர்களுக்கான திட்டம். இந்த திட்டம் அமேசான் மொபைல் பதிப்பிற்கான 30 நாள் இலவச சோதனையையும் வழங்குகிறது. இலவச அன்லிமிடெட் ஹலோ ட்யூன்களையும், விங்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சேவையையும் அணுகலாம். ரூ.199 பேக், 24 நாட்கள் செல்லுபடியாகும்.
வயர்லெஸ் பிராட்பேண்ட் இணைப்பு ஏற்கெனவே வீடுகளில் நிறுவப்பட்டிருப்பதால் நிறைய தினசரி டேட்டா தேவையில்லை என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். இருப்பினும், அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் வரையறுக்கப்பட்ட டேட்டா போன்ற அம்சங்கள் தேவைப்படலாம். இது, அவர்கள் வேட்டை விட்டு வெளியே செல்லும்போது அவர்களுக்கு உதவக்கூடும். ஜியோ மற்றும் வி ஆகியவை ஒரே விலை வரம்பில் என்ன வழங்குகின்றன என்பதைப் பார்ப்போம்.
ஏர்டெல் ரூ.199 மற்றும் ஜியோ ரூ.199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
ஜியோவின் ரூ.199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்துடன், வாடிக்கையாளர்கள் 1.5 ஜிபி தினசரி டேட்டாவை 28 நாட்களுக்குப் பெறுகிறார்கள். இந்தத் திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 100 தினசரி எஸ்.எம்.எஸ் கிடைக்கும். இந்த திட்டத்தில் JioTV, JioCinema மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலும் அடங்கும்.
1 ஜிபி தினசரி டேட்டா ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 24 நாட்களுக்கு 100 தினசரி எஸ்.எம்.எஸ் உண்டு. ஜியோ இந்த திட்டத்தை ரூ.149-க்கு விற்கிறது. இது ஏர்டெல்லின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தை விட மலிவானது.
Vi தினசரி 1 ஜிபி டேட்டாவை கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தையும் கொண்டுள்ளது. ரூ.199 வி ப்ரீபெய்ட் திட்டம் உண்மையிலேயே அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 100 தினசரி எஸ்.எம்.எஸ் கொண்டுள்ளது. இது தவிர, Vi மூவிகள் மற்றும் டிவி அணுகலுக்கான இலவச அணுகல் இந்த திட்டத்தில் அடங்கும். இந்த திட்டம் 24 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil