Advertisment

தினமும் டேட்டா; ஓர் ஆண்டுக்கு நோ ரீசார்ஜ்: இந்த ஏர்டெல் பிளான் லாபமா?

Airtel One Year Validity Recharge Plans: ஏர்டெல் ஒரு வருடம், 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட வகையில் ரூ.2,999 மற்றும் ரூ.3,359 என இரண்டு ரீசார்ஜ் திட்டங்களை கொண்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Stock Market Today 11 Januvary 2023

பார்தி ஏர்டெல்

ஏர்டெல், இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை கொண்டுள்ளது. ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் என்ற முறையில் ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன. அந்த வகையில் ஏர்டெல் வழங்கும் 365 நாட்கள் வேலிடிட்டி, 1 வருட ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

1 வருட ரீசார்ஜ் திட்டம் என்பது அன்லிமிடெட் ரீசார்ஜ் திட்டங்கள் கீழ் வருகிறது. அதாவது அன்லிமிடெட் வாயிஸ் காலிங் வசதி.

தினசரி டேட்டா மற்றும் சில சலுகைகளை வழங்குகிறது. ஏர்டெல் ரூ.2,999 மற்றும் ரூ.3,359 என்ற விலையில் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

ரூ.2,999 ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல்லின் ரூ.2,999 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாயிஸ் காலிங் வசதி, உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் ரோமிங் கால் வசதி, ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் ஆகியவை வழங்குகின்றன. அதோடு அன்லிமிடெட் 5ஜி டேட்டா சேவையும் வழங்குகிறது. இது 5G நெட்வொர்க் பகுதிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

சலுகைகள்

Apollo 24/7 சர்க்கிள் சேவைகளை மூன்று மாதங்களுக்கு கூடுதல் கட்டணமின்றி அனுபவிக்க முடியும். FASTag- ல் ரூ. 100 கேஷ்பேக் வழங்குகிறது. பயனர்கள் தங்கள் Hellotune ஆக எந்த பாடலையும் இலவசமாக வைத்துக் கொள்ளலாம். Wynk மியூசிக் ஆகியவைகளையும் இலவசமாக பெறலாம்.

ரூ. 3,359 ரீசார்ஜ் திட்டம்

ரூ. 3,359 ரீசார்ஜ் திட்டமானது அதிக டேட்டா பயன்படுத்துபவர்களுக்கு சிறந்த தேர்வாகும்.. இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிடெட் வாயிஸ் காலிங் வசதி, உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் ரோமிங் கால் வசதி, ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் ஆகியவை வழங்குகின்றன.

அதோடு அன்லிமிடெட் 5ஜி டேட்டா சேவையும் வழங்குகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான ஒரு வருட சந்தா மற்றும் 3 மாதங்கள் Apollo 24/7 சர்க்கிள் சேவைகள் சலுகைகளாக வழங்கப்படுகின்றன. மற்ற பிற பலன்களும் வழங்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக இரண்டு திட்டங்களும் நீண்ட நாட்களுக்கான பயன்களைத் தருகின்றன. அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டாம் என நினைப்பவர்களுக்கு ஏர்டெல்லின் இந்த திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Airtel Prepaid Recharge
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment