ஏர்டெல் இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ப்ரீபெய்ட், போஸ்ட் பெய்ட் என மொபைல் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப விலை, வேலிடிட்டி, டேட்டா உடன் பல்வேறு திட்டங்கள் உள்ளன. பொதுவாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 28 நாட்கள், 56, 84 நாட்கள் என வேலிடிட்டி திட்டங்களை வழங்குகின்றன.
அந்த வகையில் ஏர்டெல் 35 நாட்கள் வேலிடிட்டி உடன் ஒரு திட்டத்தை வழங்குகிறது. இது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாகும்.
ரூ.289 ரீசார்ஜ் திட்டம்
பார்தி ஏர்டெல் வழங்கும் ரூ.289 திட்டத்தில் 4ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் வசதியைப் பெறலாம். குறிப்பு தினசரி 4 ஜிபி அல்ல, மொத்தமாக 4 ஜிபி டேட்டா மட்டுமே பெற முடியும். அதோடு 300 எஸ்.எம்.எஸ், அப்பல்லோ 24|7 சர்க்கிள், ஹலோ டியூன் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றை இலவசமாகப் பெறலாம் .
எனினும் இந்த திட்டத்தில் நீங்கள் 5ஜி டேட்டா பயன்படுத்த முடியாது. ரூ.239 திட்டத்திற்கு மேல் ரீசார்ஜ் செய்தால் 5ஜி டேட்டா பயன்படுத்த முடியும் என ஏர்டெல் கூறினாலும் இந்த திட்டத்தில் நீங்கள் 5ஜி டேட்டா பயன்படுத்த முடியாது.
டேட்டாவுக்கு வைஃபை பயன்படுத்தி காலிங் வசதி மட்டும் பயன்படுத்துபவருக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”