ஏர்டெல் பிரபல தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் என பயனர்களின் வசதிக்கு ஏற்ப சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் சிலர் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் இருந்து ப்ரீபெய்ட் திட்டத்திற்கு மாற விரும்பலாம். இதை எளிதாக செய்யலாம். எவ்வாறு செய்வது என்று இங்கு பார்ப்போம்.
1. போஸ்ட்பெய்டில் இருந்து ப்ரீபெய்டு இணைப்பிற்கு மாற, ஏர்டெல் ஸ்டோர் லொக்கேட்டர் பக்கத்தைப் பயன்படுத்தி, உங்களுக்கு அருகிலுள்ள ஏர்டெல் ஸ்டோரை கண்டறியவும்.
2. நீங்கள் செல்வதற்கு முன், உங்கள் தொலைபேசியில் ஏர்டெல் போஸ்ட்பெய்டு சிம் மற்றும் ஐ.டி proof
இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
3. நீங்கள் அங்கு சென்றதும் அங்குள்ள நிர்வாகியிடம் பேசி, உங்கள் இணைப்பை போஸ்ட்பெய்டில் இருந்து ப்ரீபெய்டுக்கு மாற்ற விரும்புகிறீர்கள் என்று சொல்லுங்கள்.
4. நிர்வாகி ‘போஸ்ட்பெய்டு டூ ப்ரீபெய்டு இடம்பெயர்வு படிவம்’ கொடுப்பார். நீங்கள் அதைப் பெற்றவுடன், தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
5. நிர்வாகி விவரங்களை சரிபார்ப்பார். அதற்கு முன் போஸ்பெய்ட் திட்டத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் ஏதும் இருந்தால் அதை செலுத்த வேண்டும்.
6. இதன் பின் நிர்வாகி ப்ராசஸ் செய்து உங்கள் போனிற்கு ஓ.டி.பி ஒன்றை அனுப்புவார். அதை அவரிடம் தெரிவிக்க வேண்டும்.
7. அதன் பின் உங்கள் நம்பர் ப்ரீபெய்ட் திட்டத்திற்கு மாற்றப்படும். 2 மணி நேரம் கழித்து உங்கள் சிம் ஆக்டிவேட் செய்யப்படும். அதன் பின் தொடர்ந்து பயன்படுத்த ப்ரீபெய்ட் திட்டத்திற்கான ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்யும் போது உங்கள் போஸ்ட்பெய்ட் டேட்டா இன்வேலிட் ஆகும். இருப்பினும், டாக்டைம் பேலன்ஜை திரும்ப பெறலாம். அதற்கு உங்கள் தொலைபேசியிலிருந்து *141# ஐ டயல் செய்து, மெனுவிலிருந்து ‘Share Talk time’ ஆப்ஷனை தேர்ந்தெடுத்து 1-ஐ அழுத்தி மீதமுள்ள கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“