டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரும் நெட்வொர்க் கட்டண உயர்வு… தப்பிக்க வழி சொல்லும் ஏர்டெல்!

Airtel Recharge Plans Price Hike : Airtel prepaid plan queue என்ற ஆப்சனில் இன்று ரீசார்ஜ் செய்தால் விலையேற்றத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் தப்பித்துக் கொள்ளலாம்.

Airtel Prepaid, Postpaid Plan Hike From December 2019, Airtel Prepaid Data Plans, airtel plans, airtel tariff
Airtel Prepaid Data Plans

Airtel Prepaid, Postpaid Plan Hike From December 2019 : பாரதி ஏர்டெல், வோடஃபோன் – ஐடியா நிறுவனங்கள் டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் தங்களின் டேரிஃப் விலைகள் அனைத்தையும் உயர்த்த இருப்பதாக அறிவித்திருந்தது. ஜியோ நிறுவனமும் தங்களின் டேரிஃப்களை அறிவிப்பதாக மறைமுகமாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பேக்குகளின் விலைகள் உயர இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்திருக்கிறது.

நடப்பு டேரிஃப்களின் வேலிடிட்டி முடிவடைய இன்னும் நாட்கள் இருக்கும் வாடிக்கையாளர்கள் Queuing prepaid plans என்ற ஆப்சன் மூலமாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதனால் வாடிக்கையாளர்கள் டிசம்பர் 1ம் தேதிக்கான விலை உயர்வை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் இதற்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும். க்யூயிங் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான ஆப்சன்கள் ஏர்டெல் மை ஆப்பில் இருக்கிறது.

 Airtel prepaid plan queue: இது எவ்வாறு வேலை செய்கிறது?

எடுத்துக்காட்டாக ரூ. 199 திட்டத்தில் ரீசார்ஜ் செய்த ஒருவருக்கு டிசம்பர் 4ம் தேதி தன்னுடைய ப்ரீபெய்ட் ப்ளான் பேக் முடிவடைகிறது என்றால் அதற்கு முன்பே Airtel prepaid plan queue என்ற ஆப்சனில் இன்று ரீசார்ஜ் செய்தால் விலையேற்றத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் தப்பித்துக் கொள்ளலாம்.

இது எப்படி வேலை செய்கிறது என்று அறிந்து கொள்வதற்காக நாங்கள் சோதனை ஒன்றை செய்தோம். ரூ.399 ப்ளானில் ஏற்கனவே ரீசார்ஜ் செய்யப்பட்ட ஒரு எண்ணுக்கு இந்த முறைப்படி ரூ. 199க்கு ரீசார்ஜ் செய்தோம். ரூ. 399 ப்ளான் முடிவடைந்த ரூ. 199 ப்ளான் ஆக்டிவேட் ஆக துவங்கும். இதற்கு Truly Unlimited ப்ரீபெய்ட் பேக் ஒன்றை வாடிக்கையாளர் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் ரூ. 199, ரூ. 299, ரூ. 399, ரூ. 499 போன்ற திட்டங்களில் நீங்கள் முன் கூட்டியே ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க : அரசு ஆதரவுடன் வேவு பார்க்கும் ஹேக்கர்கள்… எச்சரிக்கை செய்த கூகுள்!

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Airtel prepaid postpaid plan hike from december

Next Story
அரசு ஆதரவுடன் வேவு பார்க்கும் ஹேக்கர்கள்… எச்சரிக்கை செய்த கூகுள்!Update Google Chrome latest version immediately to rectify the chances of hacking
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express