ஏர்டெல், வோடஃபோன், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கவர ஏராளமான டேட்டா பிளான்களை தொடர்ந்து அறிவித்து வருகின்றன.
அந்த வகையில், ஏர்டெல் நிறுவனம் சிறிய தொகையில் 1 ஜிபி டேட்டாவை அனுபவிக்கும் வகையில் டேட்டா பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், ரூ.49க்கு ஒருநாளைக்கு ஒரு ஜிபி 3ஜி/4ஜி டேட்டாவை பெற முடியும். ஆனால், இந்த பிளானின் வேலிடிட்டி ஒருநாள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஆஃபர் மூலம் டாக் டைம் அல்லது அன்லிமிடெட் கால்ஸ், எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவற்றை பெற முடியாது.
அதேபோல், ஏர்டெல் நிறுவனம் ரூ.59க்கு மற்றொரு டேட்டா பிளானையும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. அதன்மூலம், 500 எம்.பி. டேட்டாவை7 நாட்களுக்கு பெற முடியும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்.டி.டி., ரோமிங் கால்ஸ் வசதி, ஒருநாளைக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவையும் இந்த பிளான் மூலம் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
அதேபோல், ரூ.98க்கு ஒரு ஜிபி டேட்டா பிளானை ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும். ரூ.99-க்கு 2ஜிபி 3ஜி/4ஜி டேட்டாவை 5 நாட்களுக்கு பெறும் வகையிலும் டேட்டா பிளானை ஏர்டெல் வழங்கியுள்ளது.
ஏர்டெல் மட்டுமல்லாது வோடஃபோன் நிறுவனம் ரூ.48க்கு 1 ஜிபி 4ஜி/3ஜி/2ஜி டேட்டாவை ஒருநாளைக்கு மட்டும் பெறும்வகையில் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. டேட்டா தீர்ந்துவிட்டாக் 10 கே.பி.க்கு 4 பைசா வசூலிக்கப்படும். மேலும், ரூ.21க்கு ஒரு மணிநேரத்திற்கு 4ஜி/3ஜி அன்லிமிடெட் டேட்டா பிளானையும் வோடஃபோன் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவும் இதேபோல் சிறிய தொகையில் ரூ.19க்கு 0.15 ஜிபி டேட்டா மற்றும் 20 இலவச எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதியை ஒருநாளைக்கு பெறும் வகையில் பிளானை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. மேலும், ரூ.52 ரீசார்ஜ் வவுச்சர் மூலம் ஏழு நாட்களுக்கு 1.05 ஜிபி டேட்டா, 70 இலவச எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதியை பெறும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது.