ரூ.198க்கு கவர்ச்சிகரமான டேட்டா ஆஃபரை அறிவித்த ஏர்டெல்: என்னென்ன சிறப்பம்சங்கள்?

ஆனால், ஏர்டெல்லின் ரூ.199 டேட்டா பிளானில் உள்ளது போல் இலவச அன்லிமிடெட் கால் வசதி இந்த ஆஃபரில் இல்லை. ரூ.198 பிளானில் பேச சார்ஜ் செய்யப்படும்.

Airtel International Prepaid plans

ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களை கவர ரூ.198-க்கு 28 நாட்களுக்கு 1 ஜிபி/ஒருநாள் என்ற டேட்டா பிளானை அறிவித்துள்ளது ஏர்டெல் நிறுவனம். ஆனால், ஏர்டெல்லின் ரூ.199 டேட்டா பிளானில் உள்ளது போல் இலவச அன்லிமிடெட் கால் வசதி இந்த ஆஃபரில் இல்லை. ரூ.198 பிளானில் ஒரு நிமிடத்துக்கு பேச 30 பைசா சார்ஜ் செய்யப்படும்.

ரூ.198 டேட்டா பிளான் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ‘மை ஏர்டெல்’ எனப்படும் செல்ஃபோன் ஆப்பில், அவரவர் செல்ஃபோன் எண்ணுக்கு வழங்கப்படும் ஆஃபர்களில் இந்த டேட்டா பிளான் குறிப்பிடப்பட்டிருப்பவர்கள் மட்டுமே இதனை பெற முடியும். அதேபோல், டெல்லி வாடிக்கையாளர்களுக்கு ரூ.549 மற்றும் ரூ.799-க்கு இரு ஆஃபர்களை வழங்கியுள்ளது. இதில், ரூ.549-க்கு ரீசார்ஜ் செய்தால், ஒருநாளைக்கு 2.5 ஜிபி என்ற வீதம் 28 நாட்களுக்கு டேட்டா வழங்கப்படும். அதேபோல், ரூ.799-க்கு ரீசார்ஜ் செய்தால், ஒருநாளைக்கு 3.5 ஜிபி வீதம் 28 நாட்களுக்கு டேட்டா வழங்கப்படும். அதாவது, மொத்தம் 98 ஜிபி டேட்டா வழங்கப்படும்.

ஏற்கனவே, வோடஃபோன் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரூ.199-க்கு ஒருநாளைக்கு ஒரு ஜிபி டேட்டாவும், அன்லிமிடட் கால்ஸ் ஆஃபரும் வழங்கியுள்ளது. அதேபோல், இதற்கு முன்னதாகவே, ரிலையன்ஸ் ஜியோ, ரூ.149-க்கு ஒருநாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் ஆஃபரும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் அறிவித்துள்ள இந்த ஆஃபருக்கு எதிராக, தங்கள் வாடிக்கையாளர்களை கவரவே மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வருகின்றன.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Airtel recharge of rs 198 offers 1gb daily data for prepaid users

Next Story
ஐபோன் வைத்திருக்கீங்களா? சாம்சங் காலக்சி எஸ்8-ஐ இலவசமாக பயன்படுத்த வாய்ப்புgalaxys8_big_reuters1 (1)
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X