ரிலைன்ஸ் ஜியோவிற்கு போட்டியாக அவ்வப்போது பல புது திட்டங்களை மற்ற சிம் நெட்வொர்க்குகள் அறிமுகம் செய்து வருகிறது. ஜியோவின் ரூ 799 திட்டதிற்கு எதிராக அதே விலையில் ஒரு புது திட்டத்தை ஏர்டெல் அறிமுகம் படுத்தியுள்ளது.
இத்திட்டத்தில் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால், இலவச எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளுக்கு 3.5ஜிபி டேட்டா வழங்குகிறது. இத்திட்டம், டெல்லி, அசாம், மேற்கு மற்றும் கிழக்கு யுபி, சென்னை, மும்பை மற்றும் உத்தர்காந்த் நகர வாடிக்கையாளர்களுக்கு வரவிருக்கிறது.
இதே ரூ 799 ஜியோ திட்டத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தால், ஜியோ 28 நாட்களுக்கு 84 ஜிபி அதாவது ஒரு நாளுக்கு 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இத்துடன் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால், இலவச ரோமிங் மற்றும் 300 எஸ்எம்எஸ் இத்திட்டத்தில் இணைத்துள்ளது. இதில் ஏர்டெல் ஒரு நாளுக்கு 0.5ஜிபி டேட்டாவை கூடுதலாக தருகிறது. அதாவது 28 நாட்களுக்கு 98 ஜிபி டேட்டா.
ஏர்டலின் ரூ 549 திட்டத்தை போலவே, அதை விட சற்று குறைந்த விலையில் ஜியோ ஒரு திட்டத்தை வழங்கியுள்ளது. ஜியோ ரூ 509க்கு 49 நாட்களுக்கு ஒரு நாளுக்கு 2ஜிபி சேவையை வழங்குகிறது, ஆனால் ஏர்டெல் வெறும் 28 நாட்களுக்கு 98ஜிபி டேட்டாவை தருகிறது.
ஜியோ பக்கம் திரும்பிய வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்க அனைத்து நெட்வொர்க்குகளும் அதிரடி தள்ளுபடியை வழங்குகிறது.