Reliance Jio: கடந்த வாரம் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை தங்களது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளன. வீட்டிலிருந்து வேலை செய்பவர்களை இலக்காக வைத்து ஜியோ தனது புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதே சமயம் ஏர்டெல் அதன் பயனர்களுக்கு பட்ஜெட் திட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்யும் பயனர்களுக்காக, ஜியோ ரூபாய் 2,399-க்கான நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதே வேளையில் ஏர்டெல் ரூபாய் 99, 129, மற்றும் 199 க்கான திட்டங்களை தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்த விவரங்கள்
ரிலையன்ஸ் ஜியோ ரூபாய் 2,399/- திட்டம் பயன்கள்
ரூபாய் 2,399-க்கான இந்த திட்டம் ப்ரீபெய்ட் பயனர்களுக்கான ஒரு வருடாந்திர திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் அதிவேக 2GB டேட்டா, ஜியோவிலிருந்து ஜியோ எண்களுக்கு அளவில்லாத இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத எண்களுக்கு 12,000 FUP நிமிடங்கள் அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ் ஆகியவை கிடைக்கும். மற்ற ஜியோ வருடாந்திர திட்டங்களைப் போல, இந்த திட்டமும் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.
ஜியோ ஏற்கனவே ரூபாய் 2,121 க்கான ஒரு வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தை வழங்கி வருகிறது. இதில் தினமும் 1.5GB டேட்டா, ஜியோவிலிருந்து ஜியோ எண்களுக்கு அளவில்லாத இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத எண்களுக்கு 12,000 FUP நிமிடங்கள் அழைப்பு, மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவை 336 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.
இரண்டு வருடாந்திர திட்டங்களிலும் ஜியோவின் இலவச ஆப்களான Jio Cinema, MyJioApp, Jio Savaan ஆகியவை வரும்.
ஏர்டெல் ரூபாய் 99 திட்ட நன்மைகள்
இந்த புதிய ரூபாய் 99 திட்டத்தில் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு 1GB டேட்டா, அளவில்லாத அழைப்புகள் எந்த நெட்வொர்க்குக்கும், மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள். கூடுதல் நன்மைகளாக Zee5, Wynk Music மற்றும் Airtel XStream ஆகியவற்றுக்கான சந்தாவும் கிடைக்கும். பீகார், ஜார்க்கண்ட், கொல்கத்தா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ஒரிசா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் கிழக்கு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய வட்டங்களில் மட்டும் தான் இது கிடைக்கும்.
ஏர்டெல் ரூபாய் 129 திட்டம் நன்மைகள்
அனைத்து நெட்வொர்க்களுக்கும் அளவில்லாத அழைப்புகள், 1GB மொத்த டேட்டா, Zee5, Wynk Music மற்றும் Airtel XStream சந்தா ஆகிய சலுகைகளை இந்த திட்டம் வழங்குகிறது. ரூபாய் 99 மற்றும் ரூபாய் 129 திட்டங்களுக்கு இடையேயான வித்தியாசம், எஸ்எம்எஸ் மற்றும் வேலிடிட்டி ஆகியவைதான் ரூபாய் 129 திட்டம் 300 எஸ்எம்எஸ் மற்றும் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ஆசாம், பீகார், ஜார்க்கண்ட், குஜராத், ஹரியானா, கேரளா, கொல்கத்தா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மஹராஷ்டிரா, கோவா, வட கிழக்கு, ஒரிசா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் கிழக்கு, உத்திர பிரதேசம் மேற்கு, உத்திரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய வட்டங்களில் மட்டும் இத்திட்டம் கிடைக்கும்.
இந்த ரூபாய் 199-க்கான திட்டம் மற்ற இரண்டு திட்டங்களோடு ஒப்பிடும் போது அதிக நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 1GB டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், அனைத்து நெட்வொர்க்களுக்கும் அளவில்லாத அழைப்புகள் Zee5, Wynk Music மற்றும் Airtel XStream சந்தா ஆகியவை கிடைக்கும். 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டம் ஆசாம், பீகார், ஜார்க்கண்ட், குஜராத், ஹரியானா, கேரளா, கொல்கத்தா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மஹராஷ்டிரா, கோவா, வட கிழக்கு, ஒரிசா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் கிழக்கு, உத்திர பிரதேசம் மேற்கு, உத்திரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய வட்டங்களில் மட்டும் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”