Advertisment

ஏர்டெல் வழங்கும் புதுப்பிக்கப்பட்ட ரூ.349 மற்றும் ரூ.299 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்!

Airtel revises its Rs 349 Rs 299 prepaid recharge plans வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவை இலவசமாகக் கிடைக்கின்றன.

author-image
WebDesk
New Update
Airtel revises its Rs 349 Rs 299 prepaid recharge plans Tamil News

Airtel revises its Rs 349 Rs 299 prepaid recharge plans Tamil News

Airtel revises its Rs 349 Rs 299 prepaid recharge plans Tamil News : பாரதி ஏர்டெல் தனது ரூ.349 மற்றும் ரூ.299 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களைத் திருத்தியுள்ளது. முன்பைவிட இப்போது அதிக டேட்டா நன்மைகளை வழங்குகிறது. மேலும், நீண்ட கால செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. திருத்தப்பட்ட ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள் ஏற்கனவே அதிகாரப்பூர்வ தளத்தில் நேரலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

திருத்திய ஏர்டெல் ரூ.349 ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல்லின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் தனது வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்களுக்கு, ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்கப் பயன்படுகிறது. மொத்தம் 56 ஜிபி டேட்டா உள்ளது. இது இப்போது 2.5 ஜிபி தினசரி டேட்டாவை அளிக்கிறது. அதாவது, நீங்கள் இப்போது மொத்தம் 70 ஜிபி டேட்டாவை பெறுவீர்கள். மீதமுள்ள நன்மைகள் பழைய திட்டத்தைப் போன்றவைதான்.

2.5 ஜிபி டேட்டாவை தவிர, அன்லிமிடெட் அழைப்பையும், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதியையும் பெறுவீர்கள். இது இந்தத் திட்டத்துடன் தொகுக்கப்பட்டுள்ளது. மேலும், அமேசான் பிரைமுக்கு இலவச அணுகலைக் கூட வழங்குகிறது. ஆனால், 28 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இது தவிர, வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவை இலவசமாகக் கிடைக்கின்றன.

புதுப்பித்த ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் தனது ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தையும் புதுப்பித்துள்ளது. இது, இப்போது 30 நாட்கள் செல்லுபடியாகும். தொலைத்தொடர்பு ஆபரேட்டர் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு மற்றும் 30 ஜிபி மொத்த டேட்டாவை இந்த திட்டத்துடன் வழங்குகிறது. தினசரி டேட்டா வரம்பு இல்லை என்பதை நினைவில் கொள்க.

இது தவிர, நீங்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளையும் பெறுவீர்கள். அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கு ஒரு மாதத்திற்கு இலவச அணுகலைப் பெறலாம். அன்லிமிடெட் மாற்றங்களுடன் இலவச ஹலோ டியூன்கள், அப்பல்லோ 24 | 7 வட்டத்திற்கு 3 மாத அணுகல், இலவச விங்க் இசை, ஒரு வருடம் ஷா அகாடமி படிப்பு மற்றும் ஃபாஸ்டேகில் ரூ.100 கேஷ்பேக் ஆகியவை பிற நன்மைகளில் அடங்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment