ஏர்டெல், வோடபோன் தொலைதொடர்பு நிறுவனங்கள், 5 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக கட்டண உயர்வை அறிவித்துள்ளன. இந்த கட்டண உயர்வு, டிசம்பர் 3ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
வோடபோன் நிறுவனம் அதீத கடனில் சிக்கியுள்ளதால், அந்த கடனில் இருந்து மீள இந்த கட்டண உயர்வு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஏர்டெல் நிறுவனம், நியாயமான பயன்பாட்டு கொள்கையின்படி (Fair Usage Policy (FUP )), இந்த கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 50 பைசா முதல் ரூ.2.85 என்ற அளவில் கட்டண உயர்வு இருப்பதாக ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வோடபோன் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களை போல, அளவில்லா அழைப்புகள் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'3ம் பாலினத்தவர்' என்றால் அஃறிணை உயிரினங்களா?'- திருநங்கைகள் கேள்வி
தினசரி இன்டர்நெட் டேட்டாவுடன் கூடிய மாற்றியமைக்கப்பட்ட புதிய பிளான்...
ஏர்டெல், தினசரி இன்டர்நெட் டேட்டா உடன் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அளவில்லா ஆன் நெட் அழைப்புகள் ( ஏர்டெல் - ஏர்டெல் ) உள்ளடக்கிய சேவைகளை வழங்கி வருகிறது. 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 1.5 ஜிபி இன்டர்நெட் டேட்டா பேக் ரூ.248க்கும், அதே வேலிடிட்டியுடன் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி இன்டர்நெட் டேட்டா வழங்கும் வகையிலான பேக் ரூ.298 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, 84 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 1.5 ஜிபி இன்டர்நெட் டேட்டா பேக் ரூ.598க்கும். நாள் ஒன்றுக்கு 2 ஜிபி இன்டர்நெட் டேட்டா பேக் ரூ.698 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.2.398க்கும் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி இன்டர்நெட் டேட்டாவுடன் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பேக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட டேட்டா அளவிலான புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள்
2 நாட்கள் வேலிடிட்டிக்கு ரூ.19க்கு அளவில்லா ஆன் நெட் அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் மற்றும் 150 எம்பி இன்டர்நெட் டேட்டா வழங்கப்படுகிறது.
ரூ.148 பிளானில், அளவில்லா ஆன் நெட் அழைப்பு, 300 எஸ்எம்எஸ்கள், 28 நாட்கள் வேலிடிட்டிக்கு 2 ஜிபி இன்டர்நெட் டேட்டா வழங்கப்படுகிறது.
ரூ.1,498 பிளானில், அளவில்லா ஆன் நெட் அழைப்புகள், 3,600 எஸ்எம்எஸ்கள், 365 வேலிடிட்டி கொண்ட இந்த பேக்கில் 24 ஜிபி இன்டர்நெட் டேட்டா வழங்கப்படுகிறது.
டாக்டைம் அடிப்படையிலான புதிய திட்டங்கள்
ரூ.49 பிளானில், ரூ.38.52 டாக்டைம் வழங்கப்படுவதுடன் 100 எம்பி இன்டர்நெட் டேட்டா வழங்கப்படுகிறது.
ரூ.79 பிளானில், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.63.95 டாக்டைம் உடன் 200 எம்பி இன்டர்நெட் டேட்டா வழங்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.