ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களின் ரூ.149 ரீசார்ஜ் திட்டத்தில், அளவில்லாத வாய்ஸ் கால் மற்றும் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா வழங்குவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்களாக திகழும் ஏர்டெல், ஜியோ, ஏர்செல் போன்றவை போட்டி முனைப்பில் நாளுக்கு நாள் புதிய புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. இந்த ரீசார்ஜ் திட்டங்களில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், கேஸ் பேக் ஆஃபர், அதிக டேட்டா போன்றவற்றையும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், ஏர்டெல் நிறுவனம் இதுவரை செயல்பாட்டில் இருந்து வந்த, 149 ரூ ரீசார்ஜ் திட்டத்தில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, இனிமேல் 149 ரூ திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா, அளவில்லாத வாய்ஸ் கால்ஸ் மற்றும் ரோமிங் கால்ஸ், நாள் ஒன்றுக்கு 100 இலவச மெசேஜ்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த திட்டத்தில் குறிப்பிட்ட நேரம் கொண்ட வாய்ஸ் கால்களை மட்டுமே உபயோகப்படுத்த முடிந்தது. அதனுடன் ரோமிங் கால்களுக்கும் நிபந்தனை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த திட்டங்களை மாற்றி அமைத்து ஏர்டெல் அறிவித்துள்ளது. சமீபத்தில் புத்தாண்டு ஆஃபராக ஜியோ நிறுவனம் 149 ரூ ரீசார்ஜ் திட்டத்தை ஆரம்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.