ஏர்டெல் இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ளது. இதையொட்டி கிரிக்கெட் பயனர்களை கவரும் வண்ணம் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம் செய்துள்ளது.
டி20 உலகக் கோப்பை 2024க்கான அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் தளமாக ஹாட்ஸ்டார் உள்ளது. ஹாட்ஸ்டார் தளத்தில் இந்தப் போட்டிகளை இலவசமாக காணலாம். ஆனால் அதில் உள்ள மற்ற வீடியோக்களை இலவமாக காண முடியாது. இந்த நேரத்தில் ஏர்டெல் 3 மாத இலவச சந்தா உடன் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ரூ.499 முதல் இந்த திட்டம் தொடங்கிறது. இந்த ஆஃபர் அதிவேக 3ஜிபி டேட்டா, 90 நாட்களுக்கு Hotstar க்கு இலவச சந்தா மற்றும் Airtel Xstream Play-ல் 20 OTTகளுக்கான இலவச அணுகலை வழங்குகிறது.
ரூ.499 திட்டம்
ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில், 3 ஜிபி அதிவேக டேட்டா, டிஸ்னி+ஹாட்ஸ்டாருக்கு 3 மாதங்களுக்கு இலவச சந்தா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளேயில் 20 OTTகளுக்கான இலவச அணுகலை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியை கொண்டதாகும்.
ரூ. 839 திட்டம்
839 திட்டம் (ப்ரீபெய்ட்) திட்டம் ஒரு நாளைக்கு 2ஜிபி அதிவேக டேட்டா, 3 மாதங்களுக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டாருக்கு இலவச சந்தா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளேயில் 20 OTTகளுக்கான இலவச அணுகல் கொடுக்கிறது. செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள் ஆகும்.
ரூ.3,359 ஆண்டுத் திட்டம்
ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா, எக்ஸ்ஸ்ட்ரீம் பயன்பாட்டில் ஓ.டி.டி அணுகல். அதோடு இந்த திட்டத்தில் 1 வருடம் டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவை பெறலாம்.
ஏர்டெல் இதே போல் போஸ்ட்பெய்ட், ஹோம் இன்டர்நெட் ஆகியவற்றிக்கும் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“