Airtel Rs 349 prepaid plan offers 2 5gb daily data Jio VI plans Tamil News : ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. இது தினசரி 2.5 ஜிபி டேட்டா மற்றும் பிற நன்மைகளுடன் வருகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இதில், 3 மாத கால அணுகல் Apollo 24|7 Circle-ல் கூடுதல் கட்டணமின்றி, Shaw Academy, Wynk Music மற்றும் Amazon Prime மொபைல் சந்தா ஆகியவை அடங்கும். இருப்பினும், இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் மட்டுமே வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வி இதே வரம்பில் என்னென்ன திட்டங்களை வழங்குகின்றன என்பதைப் பார்ப்போம்.
ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் ஜியோ ரீசார்ஜ் பேக்குகள்
ரிலையன்ஸ் ஜியோ 2.5 ஜிபி தினசரி டேட்டாவுடன் எந்த ப்ரீபெய்ட் திட்டத்தையும் வழங்கவில்லை. 2ஜிபி அல்லது 3ஜிபி தினசரி டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்களை மட்டுமே இதில் காணலாம். டெலிகாம் ஆபரேட்டரின் தளத்தின்படி, ரூ.349 ஜியோ திட்டம் உள்ளது., இது வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா, எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் நீங்கள் OTT சந்தா எதுவும் பெற முடியாது ஆனால், நீங்கள் விரும்பினால், ஜியோவின் ரூ.499 ப்ரீபெய்ட் பேக்கை வாங்கலாம்.
இது 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது மற்றும் தினசரி 3ஜிபி டேட்டா மற்றும் கூடுதலாக 6ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. இந்தத் திட்டத்துடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவையும் பெறுவீர்கள். மீதமுள்ள பலன்கள் ரூ.349 ஜியோ திட்டத்தைப் போலவே இருக்கும்.
ஏர்டெல் ரூ.349 திட்டம் vs Vi ப்ரீபெய்ட் திட்டங்கள்
இதேபோல், Vi-ல் 3ஜிபி அல்லது 2ஜிபி டேட்டா திட்டங்கள் மட்டுமே உள்ளன. தினசரி 2.5ஜிபி டேட்டா ப்ரீபெய்ட் பேக்குகள் இதில் இல்லை. ரூ. 301 Vi ரீசார்ஜ் திட்டம் உள்ளது. இது "Vi Hospicare"-ன் கீழ் சில உடல்நலக் காப்பீட்டு நன்மைகளைக் கொண்டுவருகிறது. எனவே, பயனர்கள் 10 நாட்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,000 மதிப்புள்ள மருத்துவமனை செலவுகளை (ஆதித்யா பிர்லா ஹெல்த் இன்சூரன்ஸ் மூலம்) பெறுவார்கள். ICU சிகிச்சைக்காக தினசரி ரூ.2,000 இன்சூரன்ஸ் நன்மையும் இந்த பேக்கில் உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா, 2 ஜிபி கூடுதல் டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவையும் கிடைக்கும்.
ரூ.501 பேக் உள்ளது. இது அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவுடன் அனுப்பப்படுகிறது. இந்த திட்டத்தில் வார இறுதி டேட்டா ரோல்ஓவர் வசதி, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பதிப்பிற்கான ஒரு வருட அணுகல் மற்றும் கூடுதல் கட்டணமின்றி 12:00AM முதல் 6:00AM வரை "நைட் டேட்டா" ஆகியவை அடங்கும். ரூ.501 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.