/tamil-ie/media/media_files/uploads/2019/09/airtel.jpg)
Airtel Rs 599 prepaid recharge package offers 2gb data : ஜியோ நிறுவனத்திற்கு இணையாக வாடிக்கையாளர்களை தக்கவைக்க புதிய புதிய ஆஃபர்களை அறிமுகம் செய்து வருகிறது ஏர்டெல் நிறுவனம். தற்போது ரூ.599க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்தால் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை பெற்றிட இயலும்.
Airtel Rs 599 prepaid recharge package offers
இந்த பேக்கின் வேலிடிட்டி : 84 நாட்கள்
டேட்டா : நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வரை பயன்படுத்திக் கொள்ளலாம்
தினமும் 100 குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொள்ளலாம்.
லைஃப் இன்ஸ்யூரன்ஸ் வழங்கும் பாரதி ஆக்ஸா
பாரதி ஏர்டெல் நிறுவனம், பாரதி ஆக்ஸா காப்பீட்டு நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து இந்த ரீசார்ஜ் பேக்கில் கூடுதல் சலுகை ஒன்றை வழங்கியுள்ளது. இந்த ஏர்டெலின் புதிய பேக்கை நீங்கள் பயன்படுத்தும் போது 4 லட்சம் ரூபாய்க்கான காப்பீடுகள் உங்களுக்கு அளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அந்த காப்பீடு அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும். தற்போது இந்த சலுகை பாண்டிச்சேரி மற்றும் தமிழக மக்களுக்கு மட்டுமே. ஆனால் கூடிய விரைவில் இந்தியா முழுவதும் இந்த காப்பீட்டு சலுகையையும் ஏர்டெல் நிறுவனம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
மேலும் படிக்க : 10 மாத சந்தாவில் 12 மாதங்களுக்கு டிவி சேவைகளை வழங்கும் டிஷ் டிவி, டி2எச்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.