ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 'வாவ்' அறிவிப்பு!

ரூ.449க்கு வழங்கப்படும் 70 நாட்கள் வேலிடிட்டி, 82 நாட்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது

சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ரூ.149 திட்டத்தில் தினமும் வழங்கப்பட்டு வந்த 1 ஜிபி டேட்டா அளவை 1.5 ஜிபியாக அதிகரித்தது. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா மற்றும் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

ரூ.449க்கு வழங்கப்படும் 70 நாட்கள் வேலிடிட்டி, 82 நாட்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 82 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

இதேபோன்று ரூ.509 திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் 91 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 91 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 விலையில் புதிய திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 50 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், இலவச ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close