scorecardresearch

Airtel vs Jio: எந்த ரிசார்ஜ் திட்டம் சிறந்தது ?

எவ்வளவு புதிய பிளான்கள் வந்தாலும் வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்குள் எந்த பிளான் வருகிறதோ அந்த பிளான்தான் சிறந்த பிளானாக கருதப்படுகிறது. இந்த வகையில் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஜியோ மற்றும் ஏர்டெல்லின் திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.

Airtel vs Jio: எந்த ரிசார்ஜ் திட்டம் சிறந்தது ?

Airtel vs Jio- Best Prepaid Plans, ரிலையன்ஸ் ஜியோ,  ஏர்டெல், பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான ரிசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. எவ்வளவு புதிய பிளான்கள் வந்தாலும் வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்குள் எந்த பிளான் வருகிறதோ அந்த பிளான்தான் சிறந்த பிளானாக கருதப்படுகிறது. இந்த வகையில் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஜியோ மற்றும் ஏர்டெல்லின் திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.

ஜியோவின்  56 நாட்கள் திட்டம்

ரூ.479 விலையில் இந்த ஜியோ அறிமுகம் செய்துள்ள இந்த திட்டம்  56 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக இருக்கிறது.  தினமும்  1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 100 குறுச்செய்திகளை நீங்கள் அனுப்பலாம். ஜியோ சினிமா, ஜியோ டிவி ஆகிய சேவைகளும் அடங்கும். மேலும் வரம்பற்ற  குரல் அழைப்புகளும் வழங்கப்படுகிறது.

ஏர்டெலின் 56 நாட்கள் திட்டம்

வாடிக்கையாளர்கள் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் ரீசார்ஜ் செய்தால், 56 நாட்கள் வேலிடிட்டி தரப்படுகிறது. தினமும் 1.5 ஜிபி டேட்டா  வழங்கபப்டுகிறது. வரம்பற்ற குரல் அழைப்புகள், 100 குறுச்செய்திகள், அமேசான் ப்ரைம் வீடியோ இலவச டிரயல் ஆகிய சேவைகளும் வழங்கப்படுகிறது.

இந்த இரு திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கையில் ஜியோவின்  56 நாட்கள் திட்டத்தில்  வாடிக்கையாளர்களுக்கு 20 % தள்ளுபடி வழகப்படுதால் அது சிறந்த திட்டமாக கருத்தப்படுகிறது.   

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Airtel vs jio best prepaid plans