தீபாவளி பண்டிகை நாளை (அக்டோபர் 24) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, வாழ்த்துகளை பரிமாறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். வாட்ஸ்அப், இன்ஸ்டா உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வர்.
அந்தவகையில் தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா தீபாவளிக்கு என பிரத்யேக திட்டங்களை வழங்குகின்றன. value-for-money என்ற வகையில் நீங்கள் செலவிடக் கூடிய தொகைக்கு ஏற்ப வேலிடிட்டி, டேட்டா மற்றும் கூடுதல் வசதிகளை வழங்குகின்றன.
ஏர்டெல்
ரூ.209 திட்டம்
ஏர்டெல் ரூ.209 திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங், 100 எஸ்எம்எஸ்களை 21 நாட்களுக்கு வழங்குகிறது. தினமும் இரவு டேட்டா புதுப்பிக்கப்படும். வெளியூர் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இது ஒரு நல்ல திட்டமாகும். அன்லிமிடெட் காலிங் மூலம் எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் நீங்கள் போனில் பேசிக் கொள்ளலாம். எந்த நெட்வொர்க் பயனர்களிடமும் நீங்கள் பேசிக் கொள்ளலாம்.
அடுத்ததாக, நீங்கள் அதிக டேட்டா பயன்படுத்தாதவர்களாக இருந்தால், ஏர்டெல் ரூ.155 மற்றும் ரூ.179 திட்டங்களை வழங்குகிறது. ரூ.155 திட்டத்தில் மொத்தம் 24 நாட்கள் வேலிடிட்டி 1ஜிபி டேட்டா வழங்குகிறது. ரூ.179 திட்டத்தில் மொத்தம் 28 நாட்கள் வேலிடிட்டி 2ஜிபி டேட்டா வழங்குகிறது.
இந்நிலையில் கூடுதலாக டேட்டா தேவைப்பட்டால், டேட்டா பூஸ்டர் பேக் போட்டுக் கொள்ளலாம். ரூ.148 திட்டத்தில் 15ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும். , ரூ.118 திட்டத்தில் 12ஜிபியும், ரூ.98ல் 5ஜிபியும், ரூ.58ல் 3ஜிபி டேட்டாவும் கூடுதலாக கிடைக்கும். டேட்டா பூஸ்டர் பேக் உங்கள் அன்லிமிடெட் திட்டம் வேலிடிட்டி முடியும் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரிலையன்ஸ் ஜியோ
ஜியோவின் ரூ. 149 திட்டமானது ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவை 20 நாட்களுக்கு வழங்குகிறது மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது. ரூ.179 மற்றும் ரூ.209 திட்டங்கள் முறையே 24 நாட்கள் மற்றும் 28 நாட்களுக்கு அதே பலன்களை வழங்குகின்றன. ரூ.155 மதிப்புள்ள திட்டத்தில்
28 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங், மொத்தம் 2 ஜிபி டேட்டா வழங்குகிறது.
அதிக டேட்டா தேவைப்படும் பயனர்களுக்கு ஜியோ சில டேட்டா பூஸ்டர் திட்டங்களையும் வழங்குகிறது. பயனர்கள் ரூ.25க்கு 2ஜிபி, ரூ.61க்கு 6ஜிபி மற்றும் ரூ.121க்கு 12ஜிபி டேட்டா பூஸ்டர் திட்டத்தில் பெறலாம்.
வோடபோன் ஐடியா
வோடபோன் ஐடியா ஒரு மாதம் அதாவது, 28 நாட்களுக்கான திட்டத்தை 269 ரூபாயில் வழங்குகிறது. இதில், ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங், 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. ரூ.234 திட்டம் 24 நாட்களுக்கு அதே பலன்களை வழங்குகிறது, ரூ.199 திட்டம் 18 நாட்களுக்கான பலன்களை வழங்குகிறது.
கூடுதல் டேட்டா தேவைப்படுபவர்களுக்கு டேட்டா பூஸ்டர் திட்டம் உள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் டேட்டா பூஸ்டர் திட்டத்தின் மூலம் ரூ.151-க்கு ரீசார்ஜ் செய்தால், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மெம்பர்ஷிப் + 8ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்குகிறது. ரூ.82 திட்டம் 4ஜிபி டேட்டா, 14 நாட்களுக்கு வழங்குகிறது. ரூ.118 திட்டத்தில் 12ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“