ஜியோ Vs ஏர்டெல் Vs வோடஃபோன் : ரூ.500 குறைவான ப்ரிபெய்ட் ப்ளான்களில் எது பெஸ்ட்?

 எஸ்.டி.டி, உள்ளூர் மற்றும் ரோமிங் அழைப்புகள் இலவசம். நாள் ஒன்றிற்கு 100 எஸ்.எம்.எஸ்கள் அனுப்ப இயலும். 

Airtel vs Jio vs Vodafone Prepaid Recharge plans :  ஏர்டெல், ஜியோ, மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அதிரடி திட்டங்களை வழங்கி வருகிறது. ரூபாய் 500க்கும் கீழே வழங்கப்பட்டு வரும் சிறப்பு வாய்ந்த ரீசார்ஜ் ப்ளானகள் பற்றி அறிந்து கொள்வோம்.

Reliance Jio Rs 399 prepaid recharge offer

வேலிடிட்டி : 84 நாட்கள்
டேட்டா : மொத்தமாக 126 ஜிபி (நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி டேட்டா)
அழைப்புகள் : இலவசம்
எஸ்.எம்.எஸ்கள் : நாள் ஒன்றிற்கு 100 எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக் கொள்ளலாம்

Reliance Jio Rs 448 prepaid recharge offer

வேலிடிட்டி : 84 நாட்கள்
டேட்டா : மொத்தமாக 168 ஜிபி (நாள் ஒன்றிற்கு 2 ஜிபி டேட்டா)
அழைப்புகள் : இலவசம்
எஸ்.எம்.எஸ்கள் : நாள் ஒன்றிற்கு 100 எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக் கொள்ளலாம். ஜியோ ஆப்கள் காம்ப்ளிமெண்ட்ரியாக வழங்கப்படும்

Vodafone Rs 399 prepaid recharge offer

வோடஃபோன் வழங்கூம் இந்த ஆஃபரின் வேலிடிட்டியும் 84 நாட்கள் தான். நாள் ஒன்றிற்கு 1ஜிபி வரையில் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். எஸ்.டி.டி, உள்ளூர் மற்றும் ரோமிங் கால்கள் இலவசம். நாள் ஒன்றிற்கு 100 எஸ்.எம்.எஸ்கள் அனுப்ப இயலும்.

Vodafone Rs 458 prepaid recharge offer

வேலிடிட்டி : 84 நாட்கள்
டேட்டா : நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம்
அழைப்புகள் : இலவசம்
எஸ்.எம்.எஸ்கள் : நாள் ஒன்றிற்கு 100 எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக் கொள்ளலாம்.

மேலும் படிக்க : 150 நாட்களுக்கு இலவசமாக டிவி பார்க்க சிறப்பு சலுகை தரும் D2H…

Airtel Rs 399 prepaid recharge offer

வேலிடிட்டி 84 நாட்களாகும். நாள் ஒன்றிற்கு 1ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. எஸ்.டி.டி. உள்ளூர் மற்றும் ரோமிங் அழைப்புகள் முற்றிலும் இலவசம். நாள் ஒன்றிற்கு 100 எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக் கொள்ளலாம்.

Airtel Rs 448 prepaid recharge offer :

இந்த பேக்கின் வேலிடிட்டி 82 நாட்களாகும்.

நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி டேட்டாவை வழங்கி வருகிறது.

உள்ளூர் மற்றும் ரோமிங் அழைப்புகள் முற்றிலும் இலவசம். நாள் ஒன்றிற்கு 100 எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக் கொள்ளலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

×Close
×Close