இந்தியாவில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் முதற்கட்டாக
மெட்ரோ நகரங்களில் 5ஜி சேவை வழங்கி, அதன் பின் தற்போது பல்வேறு நகரங்களில் விரிவுபடுத்தியுள்ளன. தற்போது இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவை வழங்கப்படுகிறது.
5ஜி பயன்படுத்த புதிய சிம் வாங்கத் தேவையில்லை. உங்கள் பகுதியில் 5ஜி கிடைத்தவுடன், உங்கள் போன் 5ஜி ஆதரவு கிடைத்தவுடன் மொபைல் நெர்வோர்க் செட்டிங்ஸ் மாற்றம் செய்து 5ஜி பயன்படுத்தலாம். சில ஸ்மார்ட்போன்களில் நேரடியாகவும், சில ஸ்மார்ட்போன்களில் சாப்ட்வேர் அப்டேட்டுடனும் 5ஜி பயன்படுத்தலாம். இந்நிலையில் ஜியோ 6ஜிபி டேட்டாவுடன் ரூ.61 -க்கு 5ஜி டேட்டா பேக் அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும் ஏர்டெல், ஜியோ இரண்டும் முழுமையான 5ஜி டேட்டா விவரங்களை வெளியிடவில்லை. தற்போது உள்ள ஏர்டெல், ஜியோ டேட்டா திட்டங்களில் எது சிறந்தது என்று குறித்து இங்கு பார்ப்போம்.
ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா திட்டங்கள்
ஏர்டெல் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பல திட்டங்களைக் கொண்டுள்ளது. 28 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங் வசதி மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை வழங்கும் ரூ.299 திட்டத்தை கொண்டுள்ளது. 3 மாதங்களுக்கு Apollo 24|7 மெம்பர்ஷிப் மற்றும் இலவச Wynk மியூசிக் வசதி உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோயும் இதேபோன்ற திட்டத்தைக் கொண்டுள்ளது. ஆனால் இதன் விலை ரூ.239 ஆகும். 28 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங் வசதி மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதி உள்ளது. கூடுதலாக ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றையும் இலவசமாக பெற முடியும்.
2.5 ஜிபி டேட்டா பேக்
நீங்கள் அதிகமாக இன்டர்நெட் பயன்படுத்துவீர்கள் என்றால் அதிக டேட்டா கொண்ட பேக் திட்டங்களும் உள்ளன. ஏர்டெல், ஜியோ இரண்டும் அதை வழங்குகிறது. ரூ.399 திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் வசதி மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கூடுதலாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் வெர்ஷன், Wynk மியூசிக், ஹலோ ட்யூன்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.
அதேசமயம் ரிலையன்ஸ் ஜியோ 2.5 ஜிபி டேட்டா வகையில் ஒரே ஒரு திட்டத்தை மட்டும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.2,023 மற்றும் 252 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. கூடுதலாக ஜியோ சலுகைகளும் உள்ளன.
3 ஜிபி டேட்டா பேக்
இப்போது 3 ஜிபி டேட்டா பேக் பற்றி பார்ப்போம். இந்த வகையில் ஏர்டெல் ரூ.499 மற்றும் ரூ. 699 என்ற 2 விலையில் 3 ஜிபி டேட்டா பேக் வழங்குகிறது. ரூ.499 திட்டத்தில் 3 ஜிபி டேட்டாவுடன் அனைத்து காலிங், செசேஜ் சலுகைளுடன் கூடுதலாக 3 மாதம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் வெர்ஷன் இலவசமாக வழங்கப்படுகிறது. இது 28 நாள் வேலிடிட்டி ஆகும்.
ரூ. 699 திட்டம் அனைத்து சலுகைகளுடன் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் அமேசான் சந்தா சலுகை வழங்கப்படுகிறது.
ஜியோ ப்ளான்
ஜியோவும் 3 ஜிபி டேட்டா பேக் 2 திட்டங்களில் வழங்குகிறது. ரூ.419 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி. மற்றொன்று ரூ.1,199 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக உள்ளது.
ஏர்டெல் vs ஜியோ
இது உங்கள் தினசரி டேட்டா பயன்பாட்டைப் பொறுத்தது. உங்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவுக்கு மேல் தேவையில்லை என்றால், ஏர்டெல்லுடன் ஒப்பிடும்போது ஜியோ குறைந்த விலையில் கிடைக்கிறது. அதேநேரம் 2.5ஜிபி டேட்டா வேண்டும் என்றால் அதற்கு ஒரே ஆப்ஷன் ஏர்டெல்லின் ரூ.399 திட்டம் தான்.
அதுவே 3 ஜிபி டேட்டா தேவைப்பட்டால் மற்றும் இதர ஓடிடி தள சலுகைகளை பெற விரும்பினால் , ஏர்டெல்லின் ரூ.499 திட்டம் சிறந்ததாக இருக்கும். இல்லையெனில், ஜியோவின் ரூ.419 திட்டம் பயன்படுத்தலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/