Airtel vs Reliance Jio vs Vodafone : 28 நாட்களுக்கான புதிய காம்போ ஆஃபர்கள்!

இலவசமாக Vodafone Play App-ஐ நீங்கள் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம். 

Airtel vs Reliance Jio vs Vodafone : வாடிக்கையாளர்களின் மனதை கவருவதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள். அந்த வரிசையில் அடிக்கடி ஆஃபர்களின் விலையை குறைப்பது, எஸ்.எம்.எஸ் மற்றும் டேட்டா வசதிகளை அதிகரிப்பது போன்ற செயல்கள் அடிக்கடி நடைபெறும்.

Airtel vs Reliance Jio vs Vodafone

ஏர்டெல், ஜியோ, மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் 28 நாட்களுக்கான சூப்பர் டூப்பர் ஆஃபர்களை தற்போது வழங்கி வருகிறது. அதில் சிறந்த ஆஃபர்களை வழங்கும் நிறுவனம் எது என்பதை நீங்களே இந்த கட்டுரை மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

Reliance Jio Rs 299 prepaid plan

இந்த ஆஃபர் நாள் ஒன்றிற்கு 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

இந்த ஆஃபரில் அன்லிமிட்டட் டேட்டாவை வழங்குகிறது

நாள் ஒன்றிற்கு சுமார் 3ஜிபி டேட்டா வரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள இயலும்.

நாள் ஒன்றிற்கு 100 இலவச குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொள்ள இயலும்.

ஜியோ டிவி, ஜியோ மணி மற்றும் இதர சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும்.

Airtel Rs 349 prepaid plan

இந்த பேக்கும் நாள் ஒன்றிற்கு சுமார் 3ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது

இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும்

3ஜி மற்றும் 4ஜி ஸ்பீடில் நீங்கள் இணையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்

இலவச உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு நூறு இலவச குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதியினையும் தருகிறது இந்த பேக்.

Vodafone Rs 349 prepaid plan

இந்த பேக்கும் நாள் ஒன்றிற்கு சுமார் 3ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது

இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும்

இலவச உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு நூறு இலவச குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதியினையும் தருகிறது இந்த பேக். இலவசமாக Vodafone Play App-ஐ நீங்கள் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க : எப்படி இருக்கிறது சாம்சங்கின் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஸ் 10+

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close