Advertisment

ஜியோவை விட ஏர்டெல் பெஸ்ட்: ஏர்ஃபைபர் டேட்டா ஒப்பீடு; திட்டங்கள் என்ன?

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் இரண்டும் இந்தியாவில் வழங்கப்படும் வயர்லெஸ் டேட்டா சர்வீஸ் ஆகும். ஜியோ ஏர்ஃபைபருடன் ஒப்பிடும்போது ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் சிறந்த அன்லிமிடெட் டேட்டா அனுபவத்தை வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
Airfibre.jpg

ஜியோ, ஏர்டெல் இரண்டும் இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. மொபைல்  டேட்டா சேவை மற்றும் பிராட்பேண்ட் சேவை என வழங்கி வருகிறது. குறிப்பாக பிராட்பேண்ட் சேவையில் வயர்லெஸ் சேவையை நிறுவனங்கள் சமீபத்தில் அறிமுகம் செய்தன. இந்நிலையில், இரண்டு நிறுவனங்களும் வழங்கும் டேட்டா ஒப்பீடு மற்றும் ஸ்பீடு ரேஞ் குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர்  

தற்போதைய நிலவரப்படி, ஏர்டெல் 100 எம்.பி.பி.எஸ் வேகம் மற்றும் அன்லிமிடெட் டேட்டா உடன் ஒரே ஒரு திட்டத்தை மட்டுமே வழங்குகிறது,  அதேசமயம் ஜியோ 30  எம்.பி.பி.எஸ் வேகம் முதல் 1  ஜி.பி.பி.எஸ் வரை மாறுபட்ட டேட்டா வேகம் மற்றும் திட்டங்களை கொண்டுள்ளது.  ஜியோ டேட்டா வேகத்தின் அடிப்படையில் விலை மற்றும் மற்ற சலுகைகளை வழங்குகிறது. அதிக விலை திட்டங்கள் அதிக நன்மைகளுடன் வருகின்றன. இருப்பினும், ஜியோ ஏர்ஃபைபர் சேவை தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கிடைக்கிறது. 

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர்ஆனது மாதத்திற்கு 3333 ஜிபி  என்ற நியாயமான பயன்பாட்டுக் கொள்கையுடன் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. டேட்டா ஒதுக்கீடு தீர்ந்த பிறகு, ஏர்டெல் பயனர்கள் எவ்வித கட்டணமும் இல்லாமல்   2 Mbps வேகத்தை அனுபவிக்க முடியும். அதாவது, அடிப்படை விலையில், ஏர்டெல் பயனர்கள் 3.3TB அதிவேக தரவு மற்றும் 2 Mbps FUP வேகத்தை அனுபவிக்க முடியும்,  பெரும்பாலான ஸ்ட்ரீமிங் செயல்பாடுகளுக்கும் போதுமானதாகும். 

ஜியோ ஏர்ஃபைபர்

ஜியோவைப் பொறுத்தவரை இது ஓ.டி.டி சலுகையை அதிகம் வழங்குகிறது.  வரம்பற்ற டேட்டா 1TB அதிவேக டேட்டாவுடன் வருகிறது. 1TB வரம்பைத் தாண்டிய பிறகு, நியாயமான பயன்பாட்டுக் கொள்கையின்படி வேகம் 64 kbps ஆகக் குறையும். ஜியோ பயனர்கள் OTT உள்ளடக்கத்தைப் பார்ப்பதன் மூலம் 1TBஐக் கழித்தால், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, பில்லிங் சுழற்சியின் செல்லுபடியாகும் கூடுதல் 1TB டேட்டாவை வழங்கும் டேட்டா பூஸ்டரை ரூ.401க்கு வாங்கலாம்.

ஏர்டெல் ஏன் சிறந்தது? 

ஜியோவுடன் ஒப்பிடும்போது ஏர்டெல் மிக அதிக டேட்டாவையும் FUPக்குப் பிந்தைய பயன்பாட்டு அனுபவத்தையும் 2 Mbps உடன் வழங்குகிறது. டேட்டா பூஸ்டரை வாங்கிய பிறகு தான் ஜியோ, 1TB  டேட்டாவைப் பெறுகிறார், இது எல்லா திட்டங்களிலும் மொத்தம் 2TB தரவை வழங்குகிறது, இது ஏர்டெல் வழங்கும் 3.3TB ஐ விட குறைவாகும்.

ஜியோவின் AirFiber உடன் ஒப்பிடும்போது Airtel Xstream AirFiber அன்லிமிடெட்ட டேட்டா சலுகை வரம்புகள் மற்றும் டேட்டா தீர்ந்த பிறகு பிந்தைய வேகமும் மிகவும் சிறப்பாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Airtel Jiofibre
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment