ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் சேவை நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் கிடைக்கிறது. வீடுகளில் இருந்து வேலை பார்ப்பவர்கள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் (வைஃபை) பயன்படுத்துகின்றனர். எனினும் இதில் கூடுதல் சலுகையாக ஓ.டி.டி தளங்களுக்கான சந்தாவை பெறலாம்.
தற்போது, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. கிரிக்கெட் உலகக் கோப்பையின் நேரடி ஒளிபரப்பை நீங்கள் பார்க்க விரும்பினால், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்திற்குச் சென்று அதைச் செய்யலாம். இது ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் மூலம் இலவசமாக பெறலாம். HD தரத்தில் பார்க்கலாம்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டங்கள்
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் சந்தாவுடன் மூன்று திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த மூன்று திட்டங்களின் விலை ரூ.999, ரூ.1498 மற்றும் ரூ.3999 ஆகும். ரூ.999 திட்டத்தில் 3.3டிபி (3.3TB) டேட்டாவுடன் 200 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் வருகிறது. இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகள் அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே சந்தா, விஐபி சேவை, அப்பல்லோ 24|7 சர்க்கிள் மற்றும் விங்க் மியூசிக் பிரீமியம் ஆகியவை பெறலாம்.
ரூ.1498 திட்டமானது 300எம்.பி.பி.எஸ் வேகம் மற்றும் 3.3TB மாதாந்திர டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்தில் வழங்கப்படும் கூடுதல் நன்மைகள்அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் பேஸிக், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே சந்தா, விஐபி சேவை, அப்பல்லோ 24|7 சர்க்கிள் மற்றும் விங்க் மியூசிக் பிரீமியம் ஆகியவை பெறலாம்.
ரூ.3999 திட்டத்தில் 1 ஜி.பி.பி.எஸ் வேகம் மற்றும் 3.3டி.பி மாதாந்திர டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகள் அமேசான் பிரைம், நெட்ஃபிலிக்ஸ் பிரீமியம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் பேக், விஐபி சேவை, அப்பல்லோ 24|7 சர்க்கிள் மற்றும் விங்க் பிரீமியம்.
இந்த திட்டங்கள் அனைத்தும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையுடன் வருகின்றன. ஆனால் அதற்கு லேண்ட்லைன் கருவி தனியாக வாங்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“