/indian-express-tamil/media/media_files/2025/09/22/airtel-recharge-plan-2025-09-22-22-43-14.jpg)
ரூ.181-க்கு 22+ ஓ.டி.டி ஆப்கள் இலவசம்.. ஏர்டெல்-ன் அதிரடி பிளான்ஸ் செக் பண்ணுங்க!
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் அதிக டேட்டா, ஓடிடி சந்தா, நீண்ட வேலிடிட்டி கொண்ட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரூ.181 திட்டத்தில் 22-க்கும் மேற்பட்ட ஓ.டி.டி ஆப் சந்தா கிடைப்பதால், இந்தத் திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஏர்டெல் ரூ.181 பிளான்
இந்த டேட்டா திட்டத்திற்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த 30 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 15 ஜிபி டேட்டா பயன்படுத்தலாம். இந்த திட்டத்தில் ஓ.டி.டி சலுகை பிரமாதமாக உள்ளது. இதில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சந்தா கிடைக்கிறது. இந்த சந்தா மூலம் ஒரே ஆப்பில் 22-க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும். இதில் சோனி லிவ், லயன்ஸ்கேட் பிளே, ஆஹா, சௌபால் மற்றும் சன் நெக்ஸ்ட் போன்ற பல பிரபலமான ஆப்களின் சந்தாக்கள் அடங்கும்.
ஏர்டெல் ரூ.195 பிளான்
இந்த திட்டம் டேட்டா மற்றும் ஓ.டி.டி என இரண்டையும் சேர்த்து வழங்குகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 12 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும், 30 நாட்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவும் இதில் உள்ளது. அத்துடன், முந்தைய திட்டத்தில் இருந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சந்தாவும் இந்த திட்டத்தில் கூடுதலாக கிடைக்கிறது. எனவே, சோனி லிவ், சன் நெக்ஸ்ட் உள்ளிட்ட பல ஆப்ஸ்களை இதில் பயன்படுத்தலாம்.
ஏர்டெல் ரூ.279 பிளான்
அதிக பிரீமியம் ஓ.டி.டி ஆப்களை விரும்புவோருக்கானது இந்த திட்டம். இதில் 1 ஜிபி டேட்டா மட்டுமே கிடைத்தாலும், மாதாந்திர வேலிடிட்டி வழங்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தில் வேறு எந்த திட்டத்திலும் இல்லாத ஓ.டி.டி சலுகைகள் உள்ளன. இதில் நெட்ஃபிக்ஸ் பேசிக், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சூப்பர், ஜீ5 பிரீமியம் ஆகிய 3 முக்கிய பிரீமியம் ஓ.டி.டி சந்தாக்களும் கிடைக்கின்றன. இதுமட்டுமல்லாமல், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சந்தாவும் இதில் கிடைக்கிறது. இதன் மூலம் 25-க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்களைப் பயன்படுத்தலாம்.
மொத்தத்தில், இந்த 3 பிளான்களும் வாடிக்கையாளர்களின் வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ப டேட்டா, ஓ.டி.டி. ஆபர்களை சிறப்பாக வழங்குகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.