வாடிக்கையாளர்களுக்கு நன்றி செலுத்தும் ஏர்டெல்... இந்த ஆஃபரில் எல்லாமே அன்லிமிட்டட் தான்...

இந்த ப்ரிபெய்ட் திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப்பை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

இந்த ப்ரிபெய்ட் திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப்பை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Airtel

Airtel

AirtelThanks program: Rs 299 prepaid plan offers 2.5GB data : தங்களின் வாடிக்கையாளர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், தேங்க்ஸ் கிவ்விங் ரீசார்ஜ் ஆஃபர் ஒன்றை அறிமுகம் செய்து வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.

Advertisment

299 ரூபாய்க்கு அறிமுகமாகியுள்ள இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் 2.5ஜிபி டேட்டாவை தினமும் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் அமேசானின் ப்ரைம் மெம்பர்ஷிப் முற்றிலும் இலவசம்.

இந்த ப்ரீபெய்டில் கிடைக்கும் சலுகைகள்

299 ரூபாய்க்கு வழங்கப்படும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாகும். எந்த நெட்வொர்க்கில் இருக்கும் எண்களுக்கும் அன்லிமிட்டட் கால்களை பேசிக் கொள்ளலாம். அதே போன்று நாள் ஒன்றுக்கு 100 இலவச மெசேஜ்களை அனுப்பிக் கொள்ள இயலும்.

Advertisment
Advertisements

இது நாள் வரையில் ஏர்டெலின் இன்ஃபினிட்டி போஸ்ட்பெய்ட் ப்ளான்களை பெறும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அமேசான் ப்ரைம் ஆஃபர்களை வழங்கியது. அமேசான் ப்ரைம் ஆஃபரை பயன்படுத்த நீங்கள் ஏர்டெல் தேங்க்ஸ் என்ற ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும்.

http://www.airtel.in - ஏர்டெல் தரும் பல்வேறு சேவைகள் மற்றும் சலுகைகளை இந்த இணையத்திற்கு சென்று நீங்கள் நேரடியாக பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க : ஸ்மார்ட்போன் புகைப்பட கலைஞர்களுக்கு கூகுள் வழங்கும் சர்ப்ரைஸ்! காத்திருங்கள் மே 7 வரை

சில்வர், கோல்ட், மற்றும் ப்ளாட்டினம் என மூன்று விதமான சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு தருகின்றது. சில்வர் டையரில் இருப்பவர்களுக்கு ஏர்டெல் டிவி, விங்க் போன்ற ஆப்களை அக்செஸ் செய்ய இயலும். கோல்ட் டையரில் இருப்பவர்களுக்கு டெலிகாம் சர்வீஸ்கள் மற்றும் சிறந்த ப்ரீபெய்ட் ஆஃபர்கள் கிடைக்கும். ப்ளாட்டினம் ஆஃபர்கள் மூலமாக ஃபினான்சியல் சர்வீஸ்களை வாடிக்கையாளர்களை பெற்றுக் கொள்ள இயலும்.

Airtel

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: