Advertisment

ராஷ்மிகா, கத்ரீனாவைத் தொடர்ந்து டீப்ஃபேக்-ல் சிக்கிய ஆலியா: ஆன்லைனில் பாதுகாப்பாக இருக்க சில டிப்ஸ் இங்கே

ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் ஆகியோருக்குப் பிறகு, இப்போது ஆலியா பட்டின் டீப்ஃபேக் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களைப் பாதுகாப்பாக பயன்படுத்த சில எளிய உதவிக் குறிப்புகள் இங்கே.

author-image
WebDesk
New Update
Alia.jpg

ஏ.ஐ-ன் டீப்ஃபேக் தொழில்நுட்பம் சமீபத்தில் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படம் டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் மார்பிங் செய்யப்பட்டு வீடியோவாக வெளியானது. இதில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து கத்ரீனா கைஃப், கஜோல் ஆகியோரின் டீப்ஃபேக் வீடியோ வெளியான நிலையில்,  தற்போது ஆலியா பட்டும் இதில் சிக்கி உள்ளார். அவரின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில், சமூக வலைதளங்களைப் பாதுகாப்பாக பயன்படுத்த சில எளிய உதவிக் குறிப்புகள் குறித்து இங்கே பார்ப்போம். 

Advertisment

 ஆன்லைனில் எதையும் கவனமுடம் பகிரவும்  

உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க, சமூக ஊடகங்கள் அல்லது பிற பொதுத் தளங்களில் நீங்கள் பகிரும் தனிப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை லிமிட் செய்து கொள்ளலாம். பகிர்தல் முற்றிலும் அவசியமானால், மீடியாவை தனிப்பட்டதாக வைத்திருக்க மிக உயர்ந்த தனியுரிமை அமைப்புகளைப் பயன்படுத்துவதற்கு போதுமான கவனம் செலுத்துங்கள். ஏனென்றால், டீப்ஃபேக் கருவிகள் தரவுகளை பெறுகின்றன. உங்கள் உள்ளடக்கம் தனிப்பட்டதாக வைக்கப்படாவிட்டால் இதுபோன்ற தாக்குதல்களுக்கு ஆளாகலாம்.

ஸ்ட்ராங் பாஸ்வேர்டு 

மிகவும் அடிப்படையானது, ஆனால் கிட்டத்தட்ட எல்லா சூழ்நிலைகளிலும் சிறந்த தீர்வு. ஆம், உங்கள் அனைத்து ஆன்லைன் கணக்குகளுக்கும் வலுவான பாஸ்வேர்டு பயன்படுத்த வேண்டும். அதோடு இந்த  பாஸ்வேர்டையும் சீரான இடைவெளியில் அப்டேட் செய்ய வேண்டும் என்பதும் அவசியமாகிறது. 

ஆன்டிவைரஸ் சாப்ட்வேர் 

உங்கள் தரவு மற்றும் ஆன்லைன் கணக்குகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க இது மிகவும் நம்பகமான வழிகளில் ஒன்றாகும். மாஸ்வேர் அட்டாக்குகளில் இருந்து பாதுகாக்க உங்கள் சாதனங்களில் ஆன்டிவைரஸ் பயன்படுத்துவது சிறந்ததாகும்.  

சைபர் கிரைமினல்கள் தரவுகளைச் சேகரிக்க மாஸ்வேர்களைப் பயன்படுத்துகின்றனர், பின்னர் அதுவே டீப்ஃபேக்  வீடியோக்களை உருவாக்கப் பயன்படுத்தப்படலாம்.

டிஜிட்டல் Fingerprints அல்லது வாட்டர் மார்க் 

படங்கள் மற்றும் வீடியோக்களைப் பொறுத்தவரை, டிஜிட்டல் fingerprints  அல்லது வாட்டர்மார்க்களைப் பயன்படுத்துவது உங்கள் உள்ளடக்கத்தைப் பாதுகாக்க மற்றொரு சிறந்த வழியாகும். பாரம்பரியமாக, இந்த முறையானது, உள்ளடக்கத்தின் அசல் உரிமையாளர் யார் என்பதை பயனர்களுக்குத் தெரியப்படுத்துவதால், திருட்டுக்கு எதிராகப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகிறது. தவிர, யாரோ ஒருவர் செயற்கையான உள்ளடக்கத்தை உருவாக்குவதையும் அவை கடினமாக்குகின்றன.

மெட்டாடேட்டா மேனேஜ்மெண்ட் 

உங்கள் உள்ளடக்கத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான மற்றொரு சிறந்த வழி, அவற்றில் இருக்கும் மெட்டாடேட்டா துல்லியமாகவும் புதுப்பித்ததாகவும் இருப்பதை உறுதிசெய்வதாகும். உருவாக்கப்பட்ட தேதி, இருப்பிடம் மற்றும் பதிப்புரிமை உரிமை விவரங்கள் போன்ற தகவல்கள் இதில் அடங்கும். உரிமையை நிரூபிப்பதில் இந்த விவரங்கள் மிகவும் வசதியாக இருக்கும்.

2 பேக்டர் Authentication 

உங்கள் எல்லா சமூக ஊடகக் கணக்குகளிலும் 2 பேக்டர் authentication எனெபிள் செய்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எந்தவொரு அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டிலிருந்தும் உங்கள் கணக்கு பாதுகாப்பாக இருப்பதை இது உறுதிசெய்யும்.

எளிய வழிகளில் டீப்ஃபேக்குகளை கண்டறிதல் 

வீடியோ சோர்ஸ் செக் செய்யவும் 

 சிறந்த இணையப் பாதுகாப்பு நடைமுறைகளுடன், ஒருவர் சந்திக்கும் உள்ளடக்கத்தைச் சரிபார்ப்பது முக்கியம். படங்கள் அல்லது வீடியோக்களின் சோர்ஸ் இருமுறை சரிபார்க்குமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம். சந்தேகம் இருந்தால், ஒரிஜினல் உள்ளடக்கத்தைக் கண்காணிக்க படத் தேடல்களைச் செய்யவும்.

வீடியோவில் உள்ள முரண்பாடுகள்

பதட்டமான அசைவுகள், லைட்டிங் மாற்றம் அல்லது தோல் தொனியில் மாற்றங்கள், விசித்திரமான கண் சிமிட்டுதல் அல்லது சிமிட்டல் இல்லாமை, சீரில்லாத உதடு ஒத்திசைவு மற்றும் டிஜிட்டல் கலைப் பொருட்கள் ஆகியவற்றைப் பார்க்கவும்.

முக அம்சங்களைப் பார்க்கவும் 

முகங்களில் இருக்கும் அசாதாரண அம்சங்களுக்கு கவனம் செலுத்துங்கள், குறிப்பாக கண்கள். கண்கள் இயற்கைக்கு மாறானதாகத் தோன்றினால் அல்லது முக அசைவுகள் சற்று வித்தியாசமாகத் தோன்றினால், அது ஒரு போலி வீடியோவாக இருக்கலாம். 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/artificial-intelligence/alia-bhatt-deepfake-video-ways-to-stay-safe-online-9045902/

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

deepFake
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment