இந்தியாவில் ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்த பெரும்பாலான கேட்ஜெட்ஸ் பிரியர்களுக்கு ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் மீது ஆர்வம் உள்ளது. இதனாலேயே புதுப்புது ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை தயாரிப்பு நிறுவனங்கள் களமிறக்கி வருகின்றன. இப்போது, அமேஸ்ஃபிட் நிறுவனம் பிரீமியம் பீச்சர்களுடன் அமேஸ்ஃபிட் பிப் 6 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்கும் என்று கூறப்படுகிறது.
ரூ.7,999 விலையில் இந்தியாவில் அறிமுகம்:
இந்தியாவில் அமேஸ்ஃபிட் பிப் 6 விலை ரூ.7,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளங்களான அமேசான் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் வாங்கலாம். கருப்பு, சிவப்பு மற்றும் ஸ்டோன் வண்ணங்களில் கிடைக்கிறது. அமெரிக்காவில் இந்த வாட்ச் $79.99 (தோராயமாக ரூ.6,800) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அமேஸ்ஃபிட் பிப் 6 அம்சங்கள்: இது பிரீமியம் மாடலாக இருப்பதால், டிசைன் மட்டுமல்லாமல், டிஸ்பிளே, பேட்டரி, ஹெல்த் மானிட்டர்கள் போன்ற ஒட்டுமொத்த அம்சங்களிலும் பிரீமியத்தை உணர முடிகிறது. டிசைனைப் பொறுத்தவரை இன்-பில்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோபோன்களுடன் அலுமினியம் அலாய் ஃபிரேம் (Aluminum Alloy Frame) உள்ளது.
ப்ளூடூத் காலிங், கால் நோட்டிபிகேஷன், டூயல் கன்ட்ரோல் பட்டன்கள், வளைவு டிசைனில் பாடி கிடைக்கிறது. இந்த பாடிக்கு 5ATM ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, 50 மீ. ஆழம் வரையில் தாக்குப்பிடிக்கும். ஸ்விம்மிங் மற்றும் வாட்டர் ஆக்டிவிட்டிகளை செய்வோருக்கு பக்கா டியூரபிலிட்டி கொடுக்கும் மாடலாக இருக்கும். டிஸ்பிளேவை பொறுத்தவரை, அவுட்டோரிலும் பக்கா அவுட்புட் கொடுக்க 2,000 நிட்ஸ்பீக் பிரைட்னஸ் கொண்ட 1.97 இன்ச் (390x450 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே உள்ளது. 5ATM ரேட்டிங்குங்கு ஏற்ப ஆன்டி-ஃபிங்கர்பிரிண்ட் கோட்டிங் (Anti-fingerprint Coating) மட்டுமல்லாமல் டெம்பர்ட் கிளாஸ் (Tempered Glass) கிடைக்கிறது. 140-க்கும் மேற்பட்ட ஒர்க்அவுட் முறைகள் உள்ளன.
இந்த அமேஸ்ஃபிட் பிப் 6 மாடலின் பின்பக்கம் பயோடிராக்கர் பிபிஜி சென்சார் (BioTracker PPG Sensor) கிடைக்கிறது. இதுபோக பிரீமியம் மாடல்களில் கிடைப்பதை போல ஆக்சிலரேஷன் சென்சார் (Acceleration Sensor), கைரோஸ்கோப் (Gyroscope), ஆம்பியன்ட் லைட்சென்சார் (Ambient Light Sensor), ஜியோமேக்னட்டிக் சென்சார் (Geomagnetic Sensor) உள்ளது. சென்சார்கள் மூலம் ஹெல்த் மற்றும் ஆக்டிவிட்டி டிராக்கர்கள் வருகின்றன. 24 மணி நேர ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஸ்ட்ரெஸ் லெவல் மானிட்டரிங் (Stress Level Monitor) மானிட்டர் கிடைக்கிறது. மியூசிக் கன்ட்ரோல், கேமரா கன்ட்ரோல், ஃபைண்ட் மை போன் போன்ற யூடிலிட்டி பீச்சர்களும் இதில் உள்ளன.