/tamil-ie/media/media_files/uploads/2023/06/amazfit-pop-3r-featured.jpg)
Amazfit launches Pop 3R smartwatch
Amazfit Pop 3R: அமாஸ்ஃபிட் நிறுவனம் அமாஸ்ஃபிட் பாப் 3R என்ற புதிய ஸ்மார்ட் வாட்ச்சை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனம் இந்தியாவில் பிரத்தியேகமாக கிடைக்கிறது மற்றும் 1.43″ HD AMOLED டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஸ்போட்ஸ் மோட் அம்சங்களை கொண்டுள்ளது.
கிளாசிக் ரவுண்ட் மெட்டாலிக் டிசைனைக் கொண்டுள்ள, Amazfit Pop 3R ஆனது ப்ளூடூத் காலிங் அம்சத்துடன் வருகிறது. இதன் மூலம் அழைப்புகளை நேரடியாக நீங்கள் வாட்ச் அணிந்தபடியே பேசலாம். இன்-பில்ட் மைக்ரோஃபோன் மற்றும் ஸ்பீக்கர் மூலம் அழைப்புகளை தெளிவாக கேட்க முடியும். Contacts, Dial pad, and Call history என அனைத்தையும் வாட்ச்சில் பயன்படுத்தலாம்.
அமாஸ்ஃபிட் பாப் 3R ஸ்மார்ட் வாட்ச் டிஸ்ப்ளே 410×502 உயர் ரெசல்யூசன், 330 PPI டென்சிட்டியையும் கொண்டுள்ளது, ஆல்வேஸ்-ஆன் மோட் மற்றும் 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் (brightness) உள்ளது.
அமாஸ்ஃபிட் பாப் 3R ஆனது ஓட்டம், சைக்கிளிங், நீச்சல், யோகா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஸ்போட்ஸ் மோட்களை கொண்டுள்ளது. ரத்த ஆக்ஸிஜன், இதயத் துடிப்பு, கலோரிகள் போன்றவற்றை கணக்கிட்டு காட்டும். அமாஸ்ஃபிட் பாப் 3R ஆனது ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை பேட்டரி லைவ் கொண்டுள்ளது.
சிலிக்கான் ஸ்ட்ராப் மாறுபாட்டின் விலை ரூ. 3,999 மற்றும் மெட்டல் ஸ்ட்ராப் வேரியன்ட் விலை ரூ.4,999 ஆகும். ஜூன் 29 முதல் ப்ளிப்கார்ட் அல்லது Amazfit இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (in.amazfit.com) ஆர்டர் செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.