/indian-express-tamil/media/media_files/2025/09/20/amazfit-t-rex-3-pro-2025-09-20-16-27-09.jpg)
-30°C வரை தாங்கும் திறன், 25 நாள் பேட்டரி லைஃப்... சாகசப் பயணிகளுக்கான சரியான வாட்ச்!
அமேஸ்ஃபிட் நிறுவனம் தனது புதிய பிரீமியம் ஸ்மார்ட்வாட்சான டி-ரெக்ஸ் 3 ப்ரோ-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. சாகசப் பயணிகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ள இந்த வாட்ச், திகைக்க வைக்கும் பல அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதாரண வாட்ச் அல்ல. இது -30°C வெப்பநிலையையும் தாங்கும் அளவுக்கு மிகவும் உறுதியானது. இதன் 48 மி.மீ கேஸ், டைட்டானியம் உலோகத்தாலானது. மேலும், இதன் டிஸ்ப்ளே-ஐ பாதுகாக்கும் சபையர் கிளாஸ், கீறல் விழுவதைத் தடுக்கும். 1.5 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே 3,000 நிட்ஸ் உச்ச பிரைட்னெஸைக் கொண்டிருப்பதால், கடும் வெயிலிலும் ஸ்கிரீனைத் தெளிவாக காண முடியும்.
பிரமிக்க வைக்கும் அம்சங்கள்!
டி-ரெக்ஸ் 3 ப்ரோவில் உள்ள அம்சங்கள் ஏராளம்.
டூயல்-பேண்ட் ஜிபிஎஸ்: 6 சாட்டிலைட் அமைப்புகளின் உதவியுடன் துல்லியமான இருப்பிடத்தைக் கண்டறியும். தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்லும்போதும் ஆஃப்லைன் மேப்பிங் வசதி கை கொடுக்கும்.
எமர்ஜென்சி ஃப்ளாஷ்லைட்: இதில் டூயல்-கலர் எல்இடி ஃப்ளாஷ்லைட் உள்ளது. இதில் பூஸ்ட், ரெட் லைட் மற்றும் அவசர உதவிக்கான எஸ்.ஓ.எஸ் மோட் போன்ற வசதிகள் உள்ளன.
கால்ஸ் வசதி: இதில் உள்ள மைக் மற்றும் ஸ்பீக்கர், ப்ளூடூத் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளவும் பேசவும் உதவுகின்றன.
உடற்பயிற்சி டிராக்கர்: 180-க்கும் மேற்பட்ட விளையாட்டு முறைகளை இந்த வாட்ச் ஆதரிக்கிறது. ஓட்டம், ஸ்கூபா டைவிங் போன்ற பல செயல்பாடுகளை இது கண்காணிக்கும். அமேஸ்ஃபிட்டின் பயோசார்ஜ் சிஸ்டம், உங்கள் உடல்நிலை மற்றும் மன அழுத்தத்தையும் கணக்கிட்டுச் சரியான வழிகாட்டுதலை வழங்கும்.
விலை: இந்த வாட்சின் பேட்டரி திறன் ஆச்சரியப்படுத்துகிறது. 48 மிமீ மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 25 நாட்கள் வரை நீடிக்கும். இதன் விலை ரூ.34,999 ஆகும். இந்த வாட்ச் அமேசான் மற்றும் அமேஸ்ஃபிட் இந்தியா இணையதளத்தில் கிடைக்கிறது. பின்னர், 44 மிமீ அளவு கொண்ட சிறிய மாடலும் அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாட்ச், ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் இரண்டிலும் பயன்படுத்தலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.