Advertisment

காரில் அலெக்ஸா... எப்படிப்பட்ட சவாலை சந்தித்தோம் என்பதை விளக்கும் சென்னை பொண்ணு!

Amazon Alexa Echo Auto : பிட்ஸ் பிலானியில் படித்து முடித்த மிரியம், 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் இண்டெலில் பணியாற்றினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amazon Alexa Echo Auto

Amazon Alexa Echo Auto

 Nandagopal Rajan

Advertisment

Amazon Alexa Echo Auto :  காருக்குள் அலெக்ஸாவை பயன்படுத்துவது மிகவும் சவாலான காரியமாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை என்று கூறுகிறார் அலெக்ஸா மற்றும் எக்கோ டிவைஸ்களின் வைஸ் பிரசிடெண்ட் மிரியம் டேனியல் அறிவித்துள்ளார். காரில் இந்த டிவைஸை பயன்படுத்த கிட்டத்தட்ட ஒரு வருடம் செலவு செய்துள்ளோம்.

எக்கோ-டாட்டினை கார்களில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவதை கண்டறிந்த பிறகு தான் நாங்கள் இந்த டிவைஸ் குறித்த ஆராய்ச்சியில் நாங்கள் இறங்கினோம். மக்கள் தங்கள் போட்காஸ்ட்டினை தங்களின் வண்டிகளில் பயன்படுத்த விரும்புகின்றனர். அவர்கள் தங்களின் கார்களிலும் இசையை கேட்க விரும்புகிறார்கள். அல்லது செய்திகளை கேட்க விரும்புகிறார்கள். ஆனால் காரில் அலெக்ஸா டாட்டினை பயன்படுத்துவது அவ்வளவு எளிமையான காரியம் இல்லை என்பதை அவர்கள் உடனே புரிந்தும் கொண்டனர்.

சமையலறையில் அலெக்ஸா பயன்படுத்துவதில் டிவி, ஃபேன்கள் போன்ற சத்தங்கள் பெரிய இடையூறாக இருக்கும். ஆனால் கார் என்றால் நிலைமை இன்னும் மோசம். அது கிட்டத்தட்ட ஒரு போர் சூழல் தான். மிகவும் சிறிய இடத்தில், டிரைவருக்கு மிக அருகில் இந்த டிவைஸ் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் அங்கு தான் ஏ.சியும் வைக்கப்பட்டுள்ளது. சாலை சத்தங்கள், கூச்சல்கள், குளறுபடிகள், பக்கத்து காரில் இசைக்கும் இசை என அனைத்தும் நமக்கு சவாலான காரியமாகவே தான் இருக்கிறது.

காரில் அலெக்ஸா பயன்படுத்தும் அனுபவத்தையே மொத்தமாக மாற்றும் வகையில் நானும், எங்களுடைய குழு உறுப்பினர்களும் செயல்படத்துவங்கினோம். கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த சுமார் 30 கார்களை நாங்கள் பரிசோதனை செய்தோம். ப்ளூடூத் பயன்பாடு குறித்து நாங்கள் ஆராய்ந்தோம். ஆனால் அலெக்சாவின் கனெக்டிவிட்டி என்பது ஆப்பரேட்டிங் சிஸ்டம், பயன்படுத்தும் மொபைல் பொறுத்து அவை மாறுபடுகிறது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

இந்த அனைத்து சவால்களையும் சரி செய்து ஒரு டிவைஸ் உங்களின் கார்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவில் தான் தற்போது எக்கோ ஆட்டோவை பயன்படுத்த உள்ள நாடு என்பது குறிப்பிடத்தக்கது என்று இந்த டிவைஸ் குறித்து பேசுகிறார் சென்னையை பிறப்பிடமாக கொண்ட டேனியல். லோக்கல் நேவிகேசனை கொண்டு தான் இதனை வடிவமைத்து உள்ளோம்.

லோக்கல் நேவிகேசன் மற்றும் லோக்கல் சர்ச்சுடன் கூடிய ஜியோலொக்கேசன் இருந்தால் மட்டுமே இது செயல்படும். ஏன் என்றால் வெறும் பாடல்கள் கேட்பதற்காக மட்டுமே மக்கள் அலெக்சாவை பயன்படுத்துவதில்லை. அருகே எங்கே காஃபி ஷாப் உள்ளது, பெட்ரோல் பங்க் எங்கே உள்ளது என்ற கேள்விகளுக்கும் அலெக்சா பதில் சொல்ல வேண்டும். அதனால் தான் இது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது என்கிறார் மிரியம். பிட்ஸ் பிலானியில் படித்து முடித்த மிரியம், 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் இண்டெலில் பணியாற்றினார். தற்போது அவர் அமேசானில் கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

Amazon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment