Amazon and Flipkart Deals Tamil News: அக்டோபர் 15-ம் தேதி ஃபிளிப்கார்ட் தனது பிக் பில்லியன் நாட்கள் விற்பனையைத் தொடங்குகிறது மற்றும் அக்டோபர் 16-ம் தேதி அமேசான் தனது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையைத் தொடங்கவிருக்கிறது. இந்த மாபெரும் சலுகை விற்பனையின்போது இரு நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போன், லேப்டாப், வீட்டு உபகரணங்கள், டிவி உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்குப் பல சலுகைகளையும் தள்ளுபடியையும் வழங்கும்.
அவற்றில் விதவிதமான டிவி-க்கள் அதிகம் தேடப்படும் சாதனம் என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக ஐபிஎல் சீசன் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நிச்சயம் டிவியின் தேவை அதிகமாகவே இருக்கும். அதற்கு ஏற்றபடி இந்த மாபெரும் விற்பனையும் வந்துவிட்டது. இந்த விற்பனையின் போது நிறைய பேர் நிச்சயம் டிவியை வாங்க விரும்புவார்கள். இது பயனர்களின் முதல் டிவியாக இருக்கலாம் அல்லது ஸ்மார்ட் டிவிக்கு மேம்படுத்தப்பட்டதாகவும் இருக்கலாம். ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் நாட்கள் மற்றும் அமேசானின் தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது கிடைக்கக்கூடிய சிறந்த தொலைக்காட்சி சலுகைகளின் பட்டியல் இங்கே.
ஷின்கோ
டிவி-களில் சிறந்த சலுகைகளில் ஒன்று ஷின்கோ SO328AS. இது அமேசானின் ஃபிளாஷ் விற்பனையின் போது ரூ.3232 விலையில் கிடைக்கும். இந்த சலுகையைத் தவிர, தனது SO3A 32 இன்ச் HD ரெடி LED டிவி 8,999 ரூபாய்க்கும், 32 இன்ச் HD ரெடி ஸ்மார்ட் LED டிவி 10,499 ரூபாய்க்கும், 43 இன்ச் முழு HD ஸ்மார்ட் LED டிவி 15,999 ரூபாய்க்கும் மற்றும் 43 இன்ச் 4K UHD ஸ்மார்ட் LED டிவி 21,999 ரூபாய்க்கும் விற்க உள்ளது.
சாம்சங்
சாம்சங் தனது தி ஃபிரேம் (The Frame) டிவியை சலுகை விலையில் தரவுள்ளது. 50 இன்ச் டிவி 72,990 ரூபாய்க்கும், 55 இன்ச் டிவி 81,990 ரூபாய்க்கும் மற்றும் 65 இன்ச் டிவி 1,29,990 ரூபாய்க்கும் ஃப்ளிப்கார்ட்டில் வாங்கலாம். செரிஃப் டிவி வரிசையில் 43 அங்குல டிவி ரூ.64,990-க்கும், 49 அங்குல டிவி ரூ.84,990-க்கும் மற்றும் 55 அங்குல டிவி ரூ.99,990-க்கும் அமேசானில் கிடைக்கும்.
இது தவிர, சாம்சங் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 24 மாத EMI திட்டம், எக்ஸ்செஞ் சலுகைகள் மற்றும் ரூ.2,000 வரை கேஷ்பேக் ஆகியவற்றையும் வழங்கவுள்ளது.
ஒன்ப்ளஸ்
ஒன்ப்ளஸின் Y சீரிஸ் டிவிகள் ஃப்ளிப்கார்ட்டில் அதன் பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் போது, 32 இன்ச் டிவி ரூ.14,999 விலையிலும், 43 இன்ச் டிவி ரூ.24,999 விலையிலும் கிடைக்கும். இந்த விற்பனையின் போது டிவிகள் ரூ.1000 தள்ளுபடியுடன் விற்கப்படும். மேலும், எஸ்பிஐ கார்டு வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.
தாம்சன்
தாம்சன் தனது தொலைக்காட்சிகளை இந்த விற்பனை காலத்தில் ஃப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்தியேகமாக விற்பனை செய்யவிருக்கிறது. ஸ்மார்ட் அல்லாத சாதாரண 24 இன்ச் HD ரெடி டிவி ரூ.5,999 விலையிலும், 32 இன்ச் HD ரெடி டிவி ரூ.8,499 விலையிலும் தொடங்கும். இதன் PATH சீரிஸில் உள்ள 32 இன்ச் டிவி 10,999 ரூபாயில் தொடங்கி 55 இன்ச் டிவி 28,999 ரூபாய் வரை செல்கிறது. 32PATH0011BL-ன் விலை ரூ.11,499, 40PATH7777-ன் விலை ரூ.15,999, 43PATH0009-ன் விலை ரூ.18,999, 43PATH4545-ன் விலை ரூ.22,499 மற்றும் 50PATH1010-ன் விலை ரூ.24,499.
OATHPRO சீரிஸின் 43 இன்ச் டிவி ரூ.22,499-ல் தொடங்கி 75 இன்ச் OATHPRO2121 டிவி ரூ.94,499 வரை செல்கிறது. 50 OATHPRO 1212-ன் விலை ரூ.27,499, 55 OATHPRO 0101-ன் விலை 30,999 மற்றும் 65 OATHPRO 2020-ன் விலை 45,999 ரூபாயாக இருக்கும்.
ரியல்மீ
ரியல்மீ தனது புதிய 55 இன்ச் SLED டிவியை ரூ.3,000 தள்ளுபடியுடன் 39,999 ரூபாய்க்கு வழங்கவுள்ளது. ரியல்மீ டிவி 32 இன்ச் வேரியன்ட், ரூ.12,999-க்கும் மற்றும் 43 இன்ச் வேரியன்ட் ரூ.21,999-க்கும் கிடைக்கும்.
நோக்கியா
ஃப்ளிப்கார்ட் தனது பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் போது ஆறு நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தவுள்ளது. ரூ.12,999-க்கு 32 இன்ச் HD ரெடி ஸ்மார்ட் டிவி, ரூ.22,999-க்கு 43 இன்ச் முழு HD ஸ்மார்ட் டிவி, 43 இன்ச் UHD 4K ஸ்மார்ட் டிவி ரூ.28,999-க்கும், 50 இன்ச் UHD 4K ஸ்மார்ட் டிவி ரூ.33,999-க்கும், 55 இன்ச் UHD 4K ஸ்மார்ட் டிவி ரூ.39,999-க்கும் மற்றும் 65 இன்ச் UHD 4K ஸ்மார்ட் டிவி 59,999 ரூபாய்க்கும் கிடைக்கும்.
மோட்டோரோலா
மோட்டோரோலா ரெவோ 55 இன்ச் அல்ட்ரா HD டிவி ரூ.40,999-க்கு கிடைக்கும். ரெவோ 43 இன்ச் அல்ட்ரா HD டிவியின் விலை ரூ.30,999.
அடிப்படை 32 இன்ச் HD ரெடி ZX2 வேரியன்ட்டின் விலை ரூ.13,999 மற்றும் 40 இன்ச் முழு HD ZX2 வேரியன்ட்டின் விலை ரூ.19,999.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.