Advertisment

Amazon, Flipkart குடியரசு தின ஆஃபர்: இந்த பொருட்களுக்கு ரூ. 10,000 வரை தள்ளுபடி.. முந்துங்கள்!

Amazon and Flipkart Republic Day offers: குடியரசு தின தள்ளுபடி விற்பனையில் ஹெட்ஃபோன்கள், ஸ்பீக்கர்கள், இயர்பட்கள் உள்ளிட்ட சாதனங்களுக்கு சிறந்த ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Amazon, Flipkart குடியரசு தின ஆஃபர்: இந்த பொருட்களுக்கு ரூ. 10,000 வரை தள்ளுபடி.. முந்துங்கள்!

Amazon, Flipkart ஆன்லைன் தளத்தில் குடியரசு தின சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பொருட்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு வரவுள்ளன. வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் எலக்ட்ரானிக் சாதனங்கள் வரை பல பொருட்களுக்கு ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சேல்லில் ஹெட்ஃபோன்கள், ஸ்பீக்கர்கள், இயர்பட்கள் உள்ளிட்ட ஆடியோ சாதனப் பொருட்களுக்கு சிறந்த ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. இதை உடனே செக் செய்து பாருங்க.

Advertisment

சோனி WH-1000XM4

Sony WH-1000XM4 சிறந்த ஹெட்ஃபோன்களில் ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு இயர்கப்பிலும் 40மிமீ ட்ரைவர்ஸ் பொருத்தப்பட்டுள்ளன. 40kHz வரையிலான அதிர்வெண்களை உருவாக்கும் திறன் கொண்டவை. HD Noise Cancelling வசதி, செயலி QN1, LDAC கோடெக் ஆதரவு மற்றும் அடாப்டிவ் சவுண்ட் கன்ட்ரோல் ஆகியவை மற்ற சிறந்த அம்சங்களாகும். குடியரசு தின ஆஃபரில் இந்த ஹெட்ஃபோன்னை ரூ. 19,990 விலையில் பெறலாம். அதாவது ரூ. 29,990 இல் இருந்து ரூ. 10,000 தள்ளுபடி உடன் ரூ. 19,990 விலையில் பெறலாம்.

OnePlus Buds Z2

OnePlus Buds Z2 கடந்தாண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. TWS இயர்பட் வகையில் மிகவும் சிறந்தது. 38 மணி நேரம் வரை சார்ஜிங் வசதி, ANC ஆஃப் அம்சத்துடன் 7 மணிநேரம் வரை பிளேபேக் வசதி கொண்டுள்ளளது. ப்ளூடூத் 5.2, IP55 water resistance, டால்பி அட்மாஸ், சிறந்த காலிங் வசதிக்காக 3 மைக்ரோஃபோன்கள் உள்ளிட்டவைகள் இதன் சிறப்பம்சமாகும். இயர்பட்கள் ரூ.4,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும்,
அமேசான் குடியரசு தின விற்பனையில் ரூ.4,499க்கு வாங்கலாம். பிளிப்கார்ட்டிலும் இதே விலையில் விற்கப்படுகிறது.

ஜாப்ரா எலைட் 3

Jabra Elite 3 ஆனது 6mm ட்ரைவர்ஸ்சுடன் வருகிறது மற்றும் Qualcomm aptX ஆடியோவை ஆதரிக்கிறது. 7 மணி நேரம் வரை பேட்டரி, சார்ஜிங் கேஸுடன் பயன்படுத்தப்படும்போது 28 மணிநேரமாக நீட்டிக்கப்படுகிறது. எலைட் 3 இந்தியாவில் ரூ 6,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் அமேசான் விற்பனை இது வெறும் ரூ. 3,499 விற்பனைக்கு வரவுள்ளது.

Samsung Galaxy Buds live

கேலக்ஸி பட்ஸ் லைவ் 2020-இல் ரூ.14,990க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பல நிலைகளில் இது விலை குறைக்கப்பட்டு தற்போது, குடியரசு தின விற்பனையில் ரூ.3,999க்கு விற்பனைக்கு வரவுள்ளது. இதுவும் TWS இயர்பட்களை சேர்ந்தது. குறைந்த விலையில் சிறந்த இயர்பட்களில் சாம்சங் பட்ஸ் லைவ்வும் ஒன்றாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Flipkart Amazon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment