/indian-express-tamil/media/media_files/2024/11/15/j79SJbnP8kTklRyTtlNk.jpg)
அமேசானின் Black friday Week sale தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதன் விற்பனை வரும் நவம்பர் 21-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்:Amazon announces Black Friday Week sale dates: Here’s what you need to know
இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Fire TV Stick 4K-வை நீங்கள் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1850-க்கு பெறலாம். இந்த Fire TV Stick வாய்ஸ் கமாண்ட் மூலமாக நீங்கள் கட்டளையிட முடியும். இது சுமார் 30 சதவீதம் விரைவான செயல்பாடு திறன் கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
இதேபோல், Fire TV Stick 4K Max-ஐ ரூ. 2,780 மதிப்பில் வாங்கலாம் என அமேசான் தெரிவித்துள்ளது. நம்மிடம் எக்ஸ்பாக்ஸ் சந்தா இருந்தால், Fire TV Stick 4K Max மூலம் நமக்கு பிடித்தமான விளையாட்டுகளை பெரிய திரையில் விளையாட முடியும்.
இதுமட்டுமின்றி, கேமிங் கிஃப்ட் கார்டுகளுக்கு 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதைக் கொண்டு பிளேஸ்டேஷன் மற்றும் எக்ஸ்பாக்ஸ் விளையாட்டுகளை நாம் வாங்க முடியும். அதன்படி சுமார் ரூ. 8,000 மதிப்பிலான விளையாட்டுகளை ரூ. 7,500-க்கு வாங்க முடியும்.
இதேபோல், பல்வேறு பொருள்களுக்கான ஆஃபர்களை அமேசான் விரையில் வெளியிடுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.