புதிய சிறப்பம்சங்களுடன் வெளிவருகிறது அமேசான் எக்கோ டாட்

13 முக்கியமான ப்ராட்டுக்களை வெளியிட்டுள்ளது அமேசான் நிறுவனம்.

அமேசான் எக்கோ ஸ்பீக்கர்ஸ், சப்வூஃபர்ஸ், ஆம்ப்ளிஃபையர்கள், மைக்ரோவேவ் மற்றும் சுவர் கடிகாரம் என 13 முக்கியமான பொருட்களை வெளியிட்டிருக்கிறது. இம்முறை வெளியான அனைத்து தயாரிப்புகளிலும் மிக முக்கியமானது அமேசான் எக்கோ ஸ்பீக்கர்கள் தான்.

எக்கோ டாட்

மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் எக்கோ ஸ்பீக்கர்களில் ஒன்று தான் எக்கோ டாட். மற்ற ஸ்பீக்கர்களை விட சுமார் 70% அதிக அளவு துல்லியமான இசையை பயனாளிகளுக்கு அளிக்கக் கூடியது இந்த ஸ்பீக்கர்.

இதற்கு முன்பு வெளியான எக்கோ டாட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்ட வெளிப்புறத் தோற்றங்கள் மற்றும் செயல்பாட்டினை பெற்றிருக்கிறது இந்த ஸ்பீக்கர். இதன் விலை ரூபாய் 4, 499 ஆகும். அடுத்த மாதம் இந்த ஸ்பீக்கர் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

எக்கோ ப்ளஸ்

எக்கோ ப்ளஸ் அமேசானின் புதிய வூஃபர் ஆகும். 3 இஞ்ச் நியோடைமியத்தை கொண்டிருக்கும் இந்த வூஃபரில் வெளியாகும் சத்தம் மிகவும் துல்லியமாகவும் இரைச்சல் ஏதுமின்றியும் இருக்கும். இந்தியாவில் இதன் விலை ரூபாய் 14,999 ஆகும்.

எக்கோ ஷோ

புதிய அப்டேட்டுகளுடன் களம் இறங்குகிறது எக்கோ ஷோ ஸ்மார்ட் ஸ்பீக்கர். 10 இன்ச் ஹெச்.டி திரையுடன் வருகிறது. ஸ்கைப்புடன் இணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த ஸ்பீக்கர்.

இந்த ஸ்பீக்கர்களுடன் எக்கோ சப், எக்கோ லிங்க், எக்கோ லிங்க் ஆம்ப் போன்ற புதிய ப்ராடக்டுகளையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது அமேசான் நிறுவனம். எக்கோ லிங்க்கின் விலை 200 டாலர்கள் ஆகும். எக்கோ லிங்க் ஆம்ப்பின் விலை 300 டாலர்கள் ஆகும். இந்த இரண்டு ப்ரோடட்டுகளும் இந்தியாவிற்கு 2019ல் விற்பனைக்கு வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close