அமேசான் கிறிஸ்துமஸ் விற்பனை 2020: ஸ்மார்ட்போன், லேப்டாப்பில் சலுகைகள்

Amazon Christmas Sale 2020 ஒன்ப்ளஸ் 8T வாங்கத் திட்டமிட்டவர்கள், அதனை ரூ.42,999-க்கு வாங்கலாம்.

Amazon Christmas sale 2020 offers on xiomi samsung oneplus laptops smartphones tamil news
Amazon Christmas sale 2020 offers on xiomi samsung oneplus

Amazon Christmas Sale 2020 Tamil News : அமேசான் மீண்டும் பண்டிகை விற்பனையுடன் வந்துள்ளது. இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் கோலாகல கிறிஸ்துமஸ் விற்பனையை நடத்துகிறது. இது ஏற்கெனவே அமேசான் இந்தியாவின் இணையதளத்தில் நேரலையில் உள்ளது. ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவிகிதம் தள்ளுபடியும், லேப்டாப்புகளில் 30 சதவிகிதம் தள்ளுபடியும் வழங்குவதாக அமேசான் கூறுகிறது. ஆனால், பழைய விலைகளுடன் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதால், பெரும்பாலான சாதனங்களுக்கு நிறுவனம் தள்ளுபடியை வழங்கவில்லை என்று தெரிகிறது. தொலைபேசிகள், லேப்டாப்புகள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பலவற்றில் கிடைக்கக்கூடிய தற்போதைய சலுகைகளை பார்ப்போம்.

சாம்சங் எம் 51 ரூ.24,999 விலையிலிருந்து ரூ.22,999-க்கு வாங்கலாம். இது ரூ.10,650 வரை பரிமாற்ற தள்ளுபடி சலுகையுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட சாதனத்தில் 7,000 mAh பேட்டரி, 64 எம்பி பின்புற முதன்மை கேமரா, 6.7 இன்ச் எஃப்எச்டி + சூப்பர் அமோலேட் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளே மற்றும் பல உள்ளன. ஷியோமி ரெட்மி நோட் 9 ப்ரோ ரூ.13,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது 4 ஜிபி RAM + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கானது. இந்தக் குறிப்பிட்ட சாதனம் இன்னும் அதே பழைய விலையில் கிடைக்கக்கூடும். ஆனால், அமேசான் பழைய தொலைபேசியின் பரிமாற்றத்தில் குறைந்தபட்சம் ரூ.11,650 வரை தள்ளுபடி அளிக்கிறது. எனவே, உங்கள் தற்போதைய சாதனம் சரியான நிலையில் இருந்தால், அது மிகவும் பழையதாக இல்லை என்றால், நீங்கள் பரிமாற்ற சலுகைக்கு தகுதியானால் நிச்சயம் புதிய சாதனத்தை வாங்குவதற்கு நல்ல தள்ளுபடியைப் பெறலாம்.

ஒன்ப்ளஸ் 8T வாங்கத் திட்டமிட்டவர்கள், அதனை ரூ.42,999-க்கு வாங்கலாம். இது அசல் விலைதான் என்றாலும், எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டு, கிரெடிட் இ.எம்.ஐ மற்றும் டெபிட் இ.எம்.ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.2,000 உடனடி தள்ளுபடியை வழங்குகிறது. எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் கார்டிலும் ரூ.1,000 உடனடி தள்ளுபடி உள்ளது. நீங்கள் பரிமாற்றத்தில் ரூ.10,650 வரை தள்ளுபடி பெறுவீர்கள்.

ஒன்ப்ளஸ் நார்டின் 8 ஜிபி RAM + 128 ஜிபி சேமிப்பு சாதனம், ரூ.27,999-க்கு கிடைக்கிறது. இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டு, கிரெடிட் இ.எம்.ஐ மற்றும் டெபிட் இ.எம்.ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி அளிக்கிறது. பரிமாற்றத்தில் ரூ.10,650 தள்ளுபடியும் உள்ளது. ரெட்மி 9 ப்ரைம் ரூ.9,999-க்கு விற்கப்படுகிறது. இது 4 ஜிபி RAM + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கானது.

லேப்டாப் பொறுத்தவரை, 15.6 இன்ச் HP பெவிலியன் கேமிங் (DK0268TX) லேப்டாப் ரூ.63,990-க்கு விற்கப்படுகிறது. அதே விலைக்கு, நீங்கள் கோர் ஐ 5 செயலி, 8 ஜிபி + 512 ஜிபி எஸ்எஸ்டி, விண்டோஸ் 10 ஹோம் மற்றும் 4 ஜிபி NVIDIA GeForce GTX 650 கிராபிக்ஸ் கார்டைப் பெறுவீர்கள்.

15.6 இன்ச் 120 ஹெர்ட்ஸ் எஃப்.எச்.டி டிஸ்ப்ளே கொண்ட டெல் ஜி 3 3500 கேமிங் லேப்டாப், ரூ.72,990-க்கு கிடைக்கும். இந்த விலை 8 ஜிபி RAM + 1 டிபி எஸ்எஸ்டி, 10 வது ஜெனரல் ஐ 5 செயலி மற்றும் விண்டோஸ் 10 ஆகியவற்றுக்கானது. மேலும் ஓர் தனித்துவமான NVIDIA GTX 1650 4 ஜிபி கிராபிக்ஸ் கார்டையும் பெறுவீர்கள்.

2-இன் -1 ஹெச்பி பெவிலியன் x360 லேப்டாப்பின் விலை ரூ.74,990. டச்ஸ்க்ரீன் சாதனம் எஃப்.எச்.டி 14 இன்ச் திரை, 10-ஜென் கோர் ஐ7 செயலி, 8 ஜிபி + 512 ஜிபி எஸ்எஸ்டி, விண்டோஸ் 10 ஹோம் மற்றும் எம்எஸ் ஆபிஸுடன் வருகிறது. இந்த எல்லா லேப்டாப்புகளிலும் அமேசான் பரிமாற்ற சலுகைகளை வழங்குகிறது. ஆனால் இந்த கட்டுரையை எழுதும் நேரத்தில் எந்த வங்கி சலுகைகளும் தளத்தில் பட்டியலிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Amazon christmas sale 2020 offers on xiomi samsung oneplus laptops smartphones tamil news

Next Story
கூகுளில் போட்டோ சேமிப்பு: புதிய கட்டணம், தள்ளுபடி விவரம் இங்கே!Google One Cloud Storage Plans Price cut down in India Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com