Advertisment

கிரிக்கெட் ஸ்கோர், ரிமைண்டர்: அமேசான் எக்கோ பாப் அறிமுகம்; என்ன இது? சிறப்பம்சம் என்ன?

Amazon Echo Pop: அமேசான் எக்கோ பாப் செமி-ஸ்பியர் டிசைன் கொண்ட ப்ரண்ட ஃபேசிங் ஸ்பீக்கர் ஆகும். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சூப்பரான பேஸ்டல் நிறத்தில் ஸ்பீக்கர் அறிமுகம் செய்துள்ளது.

author-image
WebDesk
Jun 01, 2023 17:01 IST
Amazon Echo Pop

Amazon Echo Pop

அமேசான் எக்கோ குடும்பத்தில் ஒரு புதிய தயாரிப்பைச் சேர்த்துள்ளது. எக்கோ பாப் செமி-ஸ்பியர் டிசைன் கொண்ட ப்ரண்ட ஃபேசிங் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. ஒரு புதிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. எக்கோ பாப் பல சுவாரஸ்யமான அம்சங்களுடன் வருகிறது, இந்த கருவி மூலம் கிரிக்கெட் ஸ்கோர் அறிந்து கொள்ளலாம், ஸ்மார்ட் லைட்டுகள், பிளக்குகளை கன்ட்ரோல் செய்யலாம். அலாரம், ரிமைண்டர் ஆகியவற்றை அமைக்கலாம்.

Advertisment

அமேசானின் AZ2 நியூரல் எட்ஜ் பிராஸசர் கொண்டுள்ள இந்த கருவி அலெக்சாவிற்கான பதில்களை உடனடியாக வழங்க செய்கிறது.

எக்கோ பாப் விலை

எக்கோ பாப் ரூ. 4999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இதை அமேசானின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் பெற்றுக் கொள்ளலாம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சூப்பரான பேஸ்டல் நிறத்தில் ஆடியோ ஸ்பீக்கர் க்ரீன், பர்ப்பிள், பிளாக், வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது.

சிறப்பம்சம்

எக்கோ பாப் ஸ்பீக்கரில் முன்பக்க ஸ்பீக்கர் உள்ளது. அதாவது உங்களுக்கு நேராக இருக்கும். இது மியூசிக் மற்றும் வாய்ஸ்களை தெளிவாகக் கேட்பதற்கு வசதியாக செய்யப்பட்டுள்ளது. அமேசான் ப்ரைம் மியூசிக், ஹங்காமா, ஸ்பாட்டிஃபை போன்ற பல்வேறு மியூசிக் ஆப்ஸ்களில் இருந்து பாடல்களை பிளே செய்ய அலெக்ஸாவிடம் கூறி ஸ்பீக்கரைப் பயன்படுத்தலாம்.

publive-image

எக்கோ பாப் குழந்தைகளுக்கு உதவியாக உள்ளது. அலெக்ஸாவுடன் தொடர்புகொள்வது குழந்தைகளுக்கு ஆர்வத்தையும் தகவல் தொடர்புத் திறனையும் வளர்க்க உதவும். பெட் டைம் ஸ்டோரீஸ், நர்சரி ரைம்ஸ் ,கேம்கள், வினாடி வினா, ஆங்கிலப் பாடங்கள் மற்றும் பலவற்றை டி.வி, செல்போன் இல்லாமல் ஸ்பீக்கரில் கேட்டு புதிய அனுபவத்தைப் பெறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment