அமேசானில் மீண்டும் ஸ்மார்ட்போன் திருவிழா… இம்முறை 7T-க்கு செம்ம ஆஃபர்!

எச்.டி.எஃப்.சி கார்ட் மூலமாக இந்த ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்கள் ரூ.6000 தள்ளுபடியில் பெற்றுக் கொள்ளலாம்.

By: December 20, 2019, 2:19:18 PM

Amazon Fab Phones Fest: Deals on OnePlus 7T, iPhone 11, Galaxy M-series :  டிசம்பர் 19ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை அமேசான் நிறுவனம் ஃபேப் போன் திருவிழாவை நடத்தி வருகிறது. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்மார்ட்போன்களை குறைவான விலையில், சலுகையில் பெற்றுக் கொள்ளலாம். இந்த சலுகைகள் ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ, ஒன்ப்ளஸ் 7 சீரிஸ், சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ், விவோ யூ சீரிஸ் போன்களுக்கு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்தையும் ஈ.எம்.ஐயில் வாங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது.

Amazon Fab Phones Fest: Deals on OnePlus 7T, iPhone 11, Galaxy M-series – ஒன்ப்ளஸ் 7டி

இந்த ஸ்மார்ட்போனை (128ஜிபி) நீங்கள் ரூ. 34,999க்கு தள்ளுபடி விற்பனையில் வாங்கிக் கொள்ளலாம். மேலும் எச்.டி.எஃப்.சி கார்ட் மூலமாக வாங்கும் ஸ்மார்ட்போனுக்கு ரூ.1500 வரை தள்ளுபடி உண்டு. ஒன்ப்ளஸ் 7டி ஸ்மார்ட்போன் 6.55 ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரையை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இதன் ரெஃப்ரெஷ் ரேட் 90 ஹெர்ட்ஸ் ஆகும். எச்.டி.ஆர்.10+ கம்பேட்டிபளை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்போனின் அஸ்பெக்ட் ரேசியோ 20:9 ஆகும். ஒன்ப்ளஸ் 6டியை விட 31.46% குறைவான வாட்டர் ட்ராப் நோட்சை கொண்டுள்ளது.

ஒன்ப்ளஸ் 7 ப்ரோ

ஒன்ப்ளஸ் 7 ப்ரோ ஸ்மார்போன்களில் 6ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலை ரூ. 39,999 -க்கு வாங்கலாம். 8ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலை ரூ. 42,999க்கு வாங்கிக் கொள்ளலாம். 12 மாதங்கள் நோ – காஸ்ட் ஈ.எம்.ஐ மட்டுமின்றி எச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2000 வரையில் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. ஒன்ப்ளஸ் 7டி ப்ரோவிற்கு ரூ. 3000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Xiaomi Redmi Note 8 and Note 8 Pro

இந்த ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு எதையும் அறிவிக்கவில்லை அமேசான். ஆனால் ஐ.சி.ஐ.சி.ஐ கார்ட்கள் மூலம் வாங்கப்படும் ரெட்மி நோட் 8 போன்களுக்கு ரூ.750 வரை சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.  நோட் 8 ப்ரோக்களுக்கு ரூ. 1000 வரை தள்ளுபடி வழங்கப்படும்.

Apple iPhone 11, iPhone 11 Pro

எச்.டி.எஃப்.சி கார்ட் மூலமாக இந்த ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்கள் ரூ.6000 தள்ளுபடியில் பெற்றுக் கொள்ளலாம். நோ – காஸ்ட் ஈ.எம்.ஐ மற்றும் குறிப்பிட்ட கார்ட்களில் வாங்கும் போது ஐபோன் 11 மற்றும் 11 ப்ரோகளுக்கு 6 மாத ஃப்ரீ ஸ்க்ரீன் ரிப்ளேஸ்மெண்டும் தரப்படுகிறது.

Samsung Galaxy M40, M30, M20, and M10

எம் 10 ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 7499க்கு இந்த சலுகை மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று கேலக்ஸி எம் 20 ரூ. 11,499ற்கு விற்பனை செய்யப்படுகிறது கேலக்ஸி எம் 30 ரூ. 15,999க்கும், கேலக்ஸி எம் 40 ரூ. 16,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க :உடனே உங்கள் வாட்ஸ்ஆப்பை ரீ-இன்ஸ்டால் செய்யுங்கள்… இல்லையென்றால்?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Amazon fab phones fest deals on oneplus 7t iphone 11 galaxy m series

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X