அமேசான், ப்ளிப்கார்ட் இ-காமர்ஸ் தளங்கள் குடியரசு தின தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளன. அமேசானின் கிரேட் ரிபப்ளிக் டே சேல் ஜனவரி 13-ம் தேதி மதியமும், ப்ளிப்கார்ட்டின் Monumental சேல் ஜனவரி 14ம் தேதியும் தொடங்குகிறது. இருப்பினும் அமேசான் ப்ரைம் பயனர்களுக்கு ஒருநாள் முன்னதாகவும், ப்ளிப்கார்ட் ப்ளஸ் பயனர்களுக்கு ஒரு நாள் முன்னதாக ஜனவரி 13-ம் தேதியும் தொடங்குகிறது.
அமேசானின் கிரேட் ரிபப்ளிக் டே சேல்
அமேசானின் கிரேட் குடியரசு தின விற்பனையானது ஆப்பிள், iQOO, OnePlus, Samsung மற்றும் Xiaomi போன்ற பிராண்டுகளின் மொபைல் போன்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாகங்கள் மீது 40 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்க உள்ளது.
இ-காமர்ஸ் நிறுவனமானது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 13, OnePlus 13R, iQOO 13, iPhone 15 மற்றும் Galaxy M35 போன்ற போன்களுக்கு விலைக் குறைப்பு இருக்கும் என அறிவித்துள்ளது.
அமேசான் ஸ்மார்ட் டிவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் புரொஜெக்டர்கள் ஆகியவற்றில் 65 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது, அதே சமயம் இயர்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் மைக் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் ரூ.199 முதல் கிடைக்கும் என்று கூறியுள்ளது.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அலெக்சா மற்றும் ஃபயர் டிவி தயாரிப்புகளை ரூ.2,599க்கு நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது.
Flipkart Monumental Sale
ப்ளிப்கார்ட் ஐபோன் 16க்கு அதிரடி தள்ளுபடி வழங்கி உள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 16 தற்போது ரூ.74,900க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் ப்ளிப்கார்ட் Monumental Sale விற்பனையில் ரூ.63,999க்கு விற்பனை செய்யப்படும் எனக் கூறியுள்ளது.
Samsung Galaxy S24 Plus ஆனது 59,999 ரூபாய்க்கும், Apple iPad (1th Gen) 27,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வருகிறது.
Flipkart Axis Bank கார்டைப் பயன்படுத்தி வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படும் என்றும், மற்ற பிராண்டுகள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்மார்ட்ஃபோன்களில் அதிக விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள் மீது வாடிக்கையாளர்கள் தள்ளுபடியைப் பெற முடியும் என்றும் இ-காமர்ஸ் தளம் உறுதி செய்துள்ளது.
அதே போல் லேப்டாப், டி.வி, டேப்லெட்டுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவற்றிக்கும் தள்ளுபடி வழங்க உள்ளது.