Advertisment

Amazon Great Indian Festival sale 2022: 5ஜி, 6.1 இன்ச் சூப்பர் ரெடினா டிஸ்ப்ளே.. அதிரடியாக குறையும் ஐபோன் 12 விலை.. எவ்வளவு தெரியுமா?

ரூ.80 ஆயிரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 12, தற்போது அமேசான் ஆஃபரில் ரூ.40,000க்குள் விற்பனை செய்யப்பட உள்ளது.

author-image
WebDesk
Sep 19, 2022 14:30 IST
Amazon Great Indian Festival sale 2022: 5ஜி, 6.1 இன்ச் சூப்பர் ரெடினா டிஸ்ப்ளே.. அதிரடியாக குறையும் ஐபோன் 12 விலை.. எவ்வளவு தெரியுமா?

Amazon Great Indian Festival sale இன்னும் சில நாட்களில் தொடங்கப்பட உள்ள நிலையில், 5ஜி, 6.1 இன்ச் சூப்பர் ரெடினா டிஸ்ப்ளே போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட ஐபோன் 12 மாடல் ரூ.40,000க்குள் விற்பனை செய்யப்பட உள்ளது.

Advertisment

ஆப்பிள் நிறுவனம் இரண்டு நாட்களுக்கு முன் ஐபோன் 14 அறிமுகப்படுத்தியது. இதனால் பழைய ஐபோன்களின் விலை குறைந்துள்ளது. அதாவது ஐபோன் 11,12 போன்ற மாடல்களின் விலை குறைந்துள்ளது. இது ஐபோன் பிரியர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.

ஆப்பிள் தளத்தில் ஐபோன் 12 மாடல் ரூ.59,900க்கும், அமேசானில் ரூ.57,900க்கும் விற்பனையில் உள்ளது. இந்தநிலையில் அமேசான் வருடாந்திர கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ஐபோனின் விலை ரூ. 40,000 குறைவாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் டீஸரில் ஐபோன் 12 விலை குறைப்பு பற்றி தெரிவித்துள்ளது. ஐபோன் 12, 64ஜிபி ஸ்டோரேஜ் போன் இந்த விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. இது அதிரடி விலை குறைப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சம் என்ன?

ஐபோன் 12 ஆனது 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஆப்பிளின் ஏ14 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 4ஜிபி ரேம் கொண்டது. டூயல் கேமரா வசதி. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் 12எம்பி முன்பக்க கேமரா, 12எம்பி பின்புற கேமரா உள்ளது. ஐபோன் 12, 5ஜி இணைப்பு (5G connectivity) கொண்டது. 2020இல் இந்த போன் ரூ.79,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும், இந்த போன் MagSafe திறன்களுடன் வருகிறது. ஆனால் இந்த போனில் சார்ஜர், இயர்போட்கள் இருக்காது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 மாடல் போன்களிலிருந்து சார்ஜர்கள் மற்றும் இயர்போட்களை வழங்குவதை நிறுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.

அமேசானில் ஐபோன் மட்டுமல்லாது பிற முன்னணி நிறுவன போன்களுக்கும் ஆஃபர் போடப்பட்டுள்ளது. சாம்சங், ஒன் பிளஸ், ரியல் மீ போன்ற போன்கள், சாதங்களும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. பிளிப்கார்ட் நிறுவனமும் வருடாந்திர விற்பனையைத் தொடங்க உள்ளது. இம்மாதம் 23ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை பிளிப்கார்ட் ஆஃபர் விற்பனை நடைபெறயுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Iphone #Apple #Amazon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment