/indian-express-tamil/media/media_files/QhycTdeXKUsKCFK8guEI.jpg)
ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் விரைவில் தனது ஆண்டு தள்ளுபடி விற்பனையான அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023-கான தேதியை அறிவிக்க உள்ளது. இந்த ஆண்டு விற்பனையில் நிறுவனம் சாம்சங் மற்றும் இன்டெல்லுடன் இணைந்து வழங்குகிறது. இதன் மூலம் சாம்சங் தயாரிப்புகள் மற்றும் இன்டெல் ப்ராசஸர் அடிப்படையிலான கணினிகள் மீது அதிக சலுகைகளை பெற முடியும்.
வழக்கம் போல் ப்ரைம் சந்தாதாரர்களுக்கு விற்பனை முன்கூட்டியே தொடங்குகிறது. போட்டி நிறுவனமான பிளிப்கார்ட்டும் தனது ஆண்டு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் எஸ்.பி.ஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியை உறுதிப்படுத்தியுள்ளது.
Keep your festive shopping list ready for the #AmazonGreatIndianFestival.
— Amazon India (@amazonIN) September 25, 2023
Find great deals on all your favourite brands, shop with No Cost EMI, and enjoy exclusive bank offers. This festive season, jab dibbey khulenge, khulengi khushiyan. #AmazonGreatIndianFestival, coming soon.… pic.twitter.com/LwZ825QVDe
பலகட்ட தகவல்கள்படி அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் அக்டோபர் 10-ம் தேதி தொடங்கும் எனக் கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், டேப் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட பலதரப்பட்ட தயாரிப்புகளுக்கு தள்ளுபடி பெறலாம்.
OnePlus 11, Samsung Galaxy S23 மற்றும் Motorola Razr 40 Ultra போன்ற பிரபலமான ஸ்மார்ட்போன்கள் கணிசமான விலைக் குறைப்புகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, iPhone 13 மற்றும் iPhone 14 தொடர் மாதிரிகள் உட்பட பல்வேறு ஆப்பிள் தயாரிப்புகளில் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்டின் வரவிருக்கும் விற்பனையானது, தீபாவளி பண்டிகையைக் கொண்டாட புதிய கேஜெட்டுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கத் திட்டமிடுபவர்களுக்குப் பொருத்தமாக அமையும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.