/indian-express-tamil/media/media_files/2025/06/03/F1vIvOBr5Wm8JO8VEDHP.jpg)
ரூ.4,000 முதல் போர்ட்டபிள் புரொஜெக்டர்... அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலில் சிறப்பு ஆஃபர்!
அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2025 செப்.23 அன்று அனைத்துப் பயனர்களுக்காகவும் திறக்கப்பட்ட நிலையில், தற்போது தனது 2-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இ-காமர்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய வருடாந்திர சேல் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச், ஸ்மார்ட் டிவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பல வகைகளில் ஆஃபர் வழங்குகிறது.
விற்பனை முடியும் முன், ஸ்மார்ட் டிவிகளில் இருந்து போர்ட்டபிள் புரொஜெக்டர்களுக்கு (Portable Projector) மேம்படுத்த விரும்பும் பயனர்களுக்கு இதுவே சிறந்த நேரம். ஏனெனில், Lumio, Portronics, Zebronics, Wzatco போன்ற பல பிராண்டுகளின் சாதனங்கள் கவர்ச்சிகரமான சலுகைகளில் கிடைக்கின்றன. கடந்த வாரம் அமேசான் வெளியிட்ட தகவலின்படி, கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2025, முதல் 48 மணி நேரத்திலேயே 38 கோடிக்கும் (380 மில்லியன்) அதிகமான வருகையாளர்களை ஈர்த்துள்ளது. இதுவே அமேசானின் விற்பனை வரலாற்றில் "இதுவரை இல்லாத வலுவான தொடக்கம்" என்று அந்நிறுவனம் விவரிக்கிறது. இந்த டிராஃபிக்கில் 70% இந்தியாவின் 9 பெருநகரங்களில் இருந்து வந்துள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேல் தீபாவளி வரை நடைபெறும் என்று அமேசான் இந்தியாவின் துணைத் தலைவர் சௌரப் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.
நேரடி டிஸ்கவுண்டுக்கு கூடுதலாக, வாடிக்கையாளர்கள் வங்கி ஆஃபர் மூலமாகவும் பயனடையலாம். எஸ்.பி.ஐ. டெபிட், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, பரிவர்த்தனை மீது கூடுதலாக 10% தள்ளுபடி கிடைக்கும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு இ.எம்.ஐ. தொகையைப் பிரித்துச் செலுத்தும் வகையில், 24 மாதங்கள் வரை வட்டியில்லா EMI திட்டங்களையும் அமேசான் வழங்குகிறது.
ரூ.30,000-க்குள் சிறந்த போர்ட்டபிள் புரொஜெக்டர்களுக்கான ஆஃபர்கள்
விற்பனை நிகழ்வின் மூலம், ரூ.30,000-க்கு குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த போர்ட்டபிள் புரொஜெக்டர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மாடல் | விற்பனை விலை | ஆஃபர் விலை |
Lumio Arc 7 | ரூ.54,999 | ரூ.32,249 |
Portronics Beem 440 | ரூ.19,999 | ரூ.4,740 |
Wzatco Yuva Go Pro | ரூ.29,990 | ரூ.10,990 |
E GATE Atom 3X | ரூ.21,990 | ரூ.6,590 |
Zebronics Pixaplay 24 | ரூ.31,999 | ரூ.8,280 |
XGIMI Halo+ GTV | ரூ.1,99,999 | ரூ.69,999 |
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.