எல்லாப் பொருட்களையும் தள்ளுபடியில் வாங்க அமேசான் கிரேட் இந்தியன் சேல் போங்க !

Amazon Great Indian Sale : குளிர்சாதனப் பெட்டிகளுக்கு 35,000 ரூபாய் வரை தள்ளுபடி அறிவிப்பு

Amazon Great Indian Sale 2019 : ஜனவரி 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை, அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் சேல் என்ற சலுகை விலை விற்பனைகள் நடைபெற்று வருகிறது.

எலெக்ட்ரானிக்ஸ், மொபைல்கள், வீட்டிற்கு தேவையான பொருட்கள், ஆடைகள், ஆபரணங்கள், மற்றும் அன்றாட வாழ்விற்கு தேவையான அனைத்து பொருட்களுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஷன் அண்ட் அக்செசரீஸ்

பிராண்டட் ஆடைகளுக்கான சலுகைகள் 80% வரை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எச்.டி.எஃப்.சி கார்ட்கள் பயன்படுத்தி வாங்கப்படும் பொருட்களுக்கு 10% கேஷ்பேக் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே போல் அமேசான் பே மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 10% கேஷ் பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி

ஸ்மார்ட்போன்களுக்கும் அதிரடி சலுகைகள், தள்ளுபடிகள், மற்றும் விலைக்குறைப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளது அமேசான்.  ஒன்ப்ளஸ் 6டி போனை 70% வரையிலான எக்ஸ்சேன்ஞ் விலையில் வாங்கமுடியும்.

கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் விலை வெறும் 48,900 மட்டுமே… உங்களின் பழைய சாம்சங் போனை எக்ஸ்சேஞ்சில் கொடுத்தால் 9,000 வரை மேலும் சிறப்பு தள்ளுபடிகள் இந்த போனிற்கு அளிக்கப்படுகிறது.

25எம்.பி. செல்ஃபி கேமராவைக் கொண்ட ரியல்மீ யூ1 போனின் விலை ரூ. 10,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : ரூ.8000க்கு வெளியாகும் சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன்

Amazon Great Indian Sale 2019 – வீட்டு சாதனப் பொருட்கள்

ஏ.சி, வாசிங் மிஷன், மைக்ரோவேவ் ஓவன் , டிவி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களுக்கும் அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது.

டிவிகளுக்கு 55% சிறப்பு தள்ளுபடிகளையும், குளிர்சாதனப் பெட்டிகளுக்கு 35,000 ரூபாய் வரை தள்ளுபடியினையும், 35% தள்ளுபடியினை மைக்ரோ வேவ் ஓவன்களுக்கும் தந்துள்ளது.

இதில் மகிழ்ச்சி அடைய வேண்டிய மற்றொரு முக்கியமான சிறப்பு என்னவென்றால் எக்சேஞ்ச் ஆஃபரிலும் உங்களுக்கு தேவையான பொருட்களை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close