Advertisment

19ம் தேதி துவங்கும் கிரேட் இந்தியன் சேல்! இந்த முறை என்ன வாங்க ப்ளான்?

Amazon Great Indian Sale 2020 : அமேசான் ப்ரீமியம் வாடிக்கையாளர்களுக்கு 12 மணி நேரத்துக்கு முன்பே இந்த ஆஃபர் ஆரம்பமாகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amazon Great Indian Sale 2020, Amazon Great Indian Sale 2020: Dates Smartphone Offers, Discount

Amazon Great Indian Sale 2020

Amazon Great Indian Sale 2020 Discounts, Offers : 2020ம் ஆண்டுக்கான முதல் கிரேட் இந்தியன் சேலை அமேசான் அறிவித்துள்ளது. இந்த சலுகை விற்பனை காலத்தில் அமேசான் நிறுவனம் ஸ்மார்ட்போன்களுக்கு 40% வரை தள்ளுபடி வழங்குகிறது. ஓப்போ, சாம்சங்க், சியோமி, ரியல்மீ, எல்.ஜி., மற்றும் விவோ போன்ற போன்களுக்கு அதிக தள்ளுபடி வழங்கி அறிவித்துள்ளது அமேசான்.

Advertisment

ஜனவரி 19ம் தேதி அன்று துவங்கும் இந்த அமேசான் கிரேட் இந்தியன் சேல் ஜனவரி 22ம் தேதி நிறைவடைகிறது. பொங்கல் தினங்களை முன்னிட்டு அறிமுகமாகும் இந்த சேல்களில் ரெட்மி நோட் 8 ப்ரோ, ஒன்ப்ளஸ் 7டி, சாம்சங் கேலக்ஸி எம்30, விவோ யு20, ஐபோன் எக்ஸ் ஆர் போன்ற ஸ்மார்ட்போன்கள் இந்த சலுகை விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது. எச்.பி, ஜே.பி.எல், போஸ், சோனி மற்றும் பல பிராண்ட்கள் தங்களின் எலெக்ட்ரானிக்ஸ் ப்ரோடெக்ட்களின் சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது.

எஸ்.பி.ஐ கார்ட்கள் மூலமாக ஸ்மார்ட்போன்கள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்குவதற்கு 10% வரை சலுகை வழங்கப்படுகிறது. மேலும் நோ-காஸ்ட் இ.எம்.ஐ மூலமாக நீங்கள் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.  தற்போது வெகு சில ப்ரோடெக்டுகளை மட்டும் அந்த பக்கம் கொண்டுள்ளது. ஆனால் வருகின்றன நாட்களில் இந்த பக்கத்தில் நிறைய புதிய ப்ரோடெக்ட்கள் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் ப்ரீமியம் வாடிக்கையாளர்களுக்கு 12 மணி நேரத்துக்கு முன்பே இந்த ஆஃபர் ஆரம்பமாகிறது.

மேலும் படிக்க : ஃப்ளிப்கார்ட்டின் முதல் லேப்டாப்.. லாஸ்வேகஸில் கோலாகல வெளியீடு!

Amazon Prime Amazon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment